அமித்ஷாவுடன் மக்கள் பிரச்னைக்காகவே சந்திப்பு; கூட்டணி குறித்து இல்லை என்கிறார் இ.பி.எஸ்.,!
அமித்ஷாவுடன் மக்கள் பிரச்னைக்காகவே சந்திப்பு; கூட்டணி குறித்து இல்லை என்கிறார் இ.பி.எஸ்.,!
அமித்ஷாவுடன் மக்கள் பிரச்னைக்காகவே சந்திப்பு; கூட்டணி குறித்து இல்லை என்கிறார் இ.பி.எஸ்.,!

இருமொழி கொள்கை
கல்வி திட்டத்தில் தமிழக அரசுக்கு விடுவிக்க வேண்டிய தொகையை உடனடியாக விடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம். தமிழகத்தில் தொடர்ந்து இருமொழி கொள்கை கடைபிடிக்கபட்டு வருகிறது. அதனை தொடர வேண்டும் என்றும், லோக்சபா தொகுதி மறுசீரமைப்பில் தமிழகத்திற்கு எந்த விதத்திலும் பாதிப்பு ஏற்படாத வண்ணம், இந்த மறுசீரமைப்பை நடத்த வேண்டும் என்றும், கோதாவரி- காவிரி இணைப்பு திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினோம்.
மேகதாது அணை
தமிழகம் நீர்ப்பற்றாக்குறை மாநிலமாக இருக்கின்ற காரணத்திலே, தொடர்ந்து தமிழக மக்களுக்கு தேவையான நீர் கிடைப்பதில் சிக்கல் இருந்து கொண்டு இருக்கிறது. நிலையாக தமிழக மக்களுக்கு நீர் கிடைக்கின்ற விதமாக, கோதாவரி-காவிரி நீர் திட்டத்தை விரைவுப்படுத்த வேண்டும் என்றும், காவிரி ஆற்றின் குறுக்கே, மேகதாது அணை கட்டப்படுவதாக செய்தி வெளியாகி கொண்டு இருக்கின்றன.
முறைகேடு
தமிழகத்தில் டாஸ்மாக்கில் மிகப்பெரிய முறைகேடு நடைபெற்று இருப்பதாக, அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதனை முழுமையாக விசாரித்து தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இருக்கிறோம். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர் கெட்டு இருக்கிறது.
கேள்வியும், பதிலும்!
நிருபர்: அரசியல் ரீதியாக இரண்டு தலைவர்கள் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அ.தி.மு.க., பா.ஜ., இடையே கூட்டணி உடன்படிக்கை ஏற்பட்டு விட்டது என்பதை நாம ஏற்றுக்கொள்ளலாமா?