நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான இடஒதுக்கீடு: தகவல் வெளியாகாததற்கு யார் காரணம்?
நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான இடஒதுக்கீடு: தகவல் வெளியாகாததற்கு யார் காரணம்?
நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான இடஒதுக்கீடு: தகவல் வெளியாகாததற்கு யார் காரணம்?
மாநகராட்சி, நகராட்சிகளுக்கான உள்ளாட்சித் தேர்தலில், இடஒதுக்கீடு, பெண்களுக்கான ஒதுக்கீடு போன்ற விவரங்களை வேண்டுமென்றே மாநில தேர்தல் கமிஷன் மறைத்ததாக, எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
எந்தெந்த வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டவை, எவை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான வார்டுகள், எந்தெந்த மேயர் பதவிகள் பெண்களுக்குரியவை, எவை ஆதிதிராவிடர்களுக்கு உரியவை போன்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை.
நகராட்சி நிர்வாகத் துறை செயலர், சொந்த காரணங்களுக்காக விடுமுறையில் சென்றிருந்தார். நகராட்சி நிர்வாக கமிஷனராக இருந்த செந்தில்குமார், ஒரு வாரத்துக்கு முன் மாற்றப்பட்டு, சந்திரகாந்த் காம்ளே புதிய கமிஷனராக நியமிக்கப்பட்டார்.
மேலும், இத்துறையில் உள்ள முக்கிய அதிகாரிகள் அனைவரும், முந்தைய ஆட்சியில் இருந்து தொடர்ந்து அதே பதவியில் இருப்பவர்கள்.ஆதிதிராவிடர்களுக்கான இடஒதுக்கீடு, பெண்களுக்கான ஒதுக்கீடு போன்ற விவரங்கள் தொடர்பாக அரசாணை பிறப்பித்து, அதை செய்தியாக வெளியிட்டிருக்க வேண்டும். அவ்வாறு செய்யாததால், கடைசி நேரம் வரை குழப்பம் நீடித்தது. சென்னை மாநகராட்சி மட்டும், தனது வார்டுகளுக்கான இடஒதுக்கீட்டை வெளியிட்டது.அதேநேரத்தில், கிராம பஞ்சாயத்துகள், ஒன்றியங்கள், மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர்கள் ஆகிய பதவிகளுக்கான இடஒதுக்கீடு பற்றிய அறிவிப்பை அத்துறை ஏற்கனவே வெளியிட்டுவிட்டது.
இதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டு, அரசிதழிலும் வெளியிடப்பட்டது. இதனால், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பதவிகளுக்கான இடஒதுக்கீடு தொடர்பாக, இவ்வாறு செய்யாதது ஏன்? என்ற கேள்வி எழுந்துள்ளது.பிரச்னை இவ்வாறு இருக்க, மூன்று மாதங்களுக்கு முன்பு வரை ஆளுங்கட்சியாக இருந்து, வார்டு பிரிப்பு போன்ற பணிகளை மேற்கொண்ட தி.மு.க.,வே, மாநில தேர்தல் கமிஷன் மீது குற்றம்சாட்டி இருப்பது ஆச்சரியத்தை அளித்துள்ளது.பா.பாஸ்கர்பாபு-