/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/பாளை. வாலிபருக்கு வெட்டு தந்தை, மகன் மீது வழக்குபாளை. வாலிபருக்கு வெட்டு தந்தை, மகன் மீது வழக்கு
பாளை. வாலிபருக்கு வெட்டு தந்தை, மகன் மீது வழக்கு
பாளை. வாலிபருக்கு வெட்டு தந்தை, மகன் மீது வழக்கு
பாளை. வாலிபருக்கு வெட்டு தந்தை, மகன் மீது வழக்கு
ADDED : செப் 22, 2011 12:45 AM
திருநெல்வேலி : பாளை.
யில் பெண் தகராறில் வாலிபரை அரிவாளால் வெட்டிய தந்தை,
மகனை போலீசார் தேடி வருகின்றனர். பாளை. பொட்டல் ஜோதி தெருவை சேர்ந்தவர்
ராஜன்(35). கட்டடத்தொழிலாளி. இவருக்கும், அப்பகுதியை சேர்ந்த இரு
பெண்களுக்கும் இடையே 'பழக்கம்' இருந்தது. இதை அதே பகுதியை சேர்ந்த
குருநாதன், அவர் மகன் சுடர் கண்டித்தனர். எனினும் ராஜன் தன் நடவடிக்கைகளை
மாற்றவில்லை. இதனால் ராஜன் மீது குருநாதன் தரப்புக்கு ஆத்திரம் ஏற்பட்டது.
பொட்டல் ரோட்டில் நேற்று நடந்து சென்று கொண்டிருந்த ராஜனை குருநாதனும்,
சுடரும் அரிவாளால் வெட்டினர். ராஜன் படுகாயமடைந்தார். பாளை. ஐகிரவுண்ட்
ஆஸ்பத்திரியில் அவர் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து பாளை. போலீசார்
விசாரித்து வருகின்றனர்.


