இந்தோனேஷியாவில் படகு கவிழ்ந்து 11 பேர் பலி
இந்தோனேஷியாவில் படகு கவிழ்ந்து 11 பேர் பலி
இந்தோனேஷியாவில் படகு கவிழ்ந்து 11 பேர் பலி
UPDATED : செப் 21, 2011 05:31 PM
ADDED : செப் 21, 2011 03:45 PM
ஜகார்தா: இந்தோனேஷியாவில் படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 11 பேர் பலியாயினர்.
பலர் காயமடைந்தனர். இந்தோனேஷியாவின் பாலி தீவு பகுதியில், நெளசாநெம்போகான் பகுதியில் 36 பேருடன் பயணிகள் படகு ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அருகே உள்ள தீவு ஒன்றை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது படகு திடீரென கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. அதில் பயணம் செய்த 11 பேர் கடலில் முழ்கி பலியாயினர். 14 பேர் மீட்கப்பட்டனர். இதே பகுதியில் தான் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் படகு கவிழந்ததில் 330 பேர் பலியாயினர் என்பது குறிப்பிடத்தக்கது.