ADDED : செப் 21, 2011 01:05 AM
தூத்துக்குடி:மா.கம்யூ.,கட்சியின் கிளை மாநாடு கோரம்பள்ளத்தில்
நடந்தது.மாநாட்டிற்கு மாரிமுத்து தலைமை வகித்தார். கிளை செயலாளர்
சந்திரசேகரன் வேலை அறிக்கை சமர்ப்பித்தார். மாநகர செயலாளர் அர்ச்சுணன்
கலந்து கொண்டு பேசினார். மாநாட்டில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கோரம்பள்ளத்தில் தினமும் ஏராளமான மாணவ, மாணவியர், தொழிலாளர்கள், பள்ளி,
கல்லூரி உட்பட பல இடங்களுக்கு செல்கின்றனர். சரியான நேரத்தில் பஸ்வசதி
இல்லாததால் மாணவ, மாணவியர்கள் உட்பட ப லருக்கும் காலதாமதம் ஏற்படுகிறது.
கோரம்பள்ளத்திலிருந்து புதியதுறைமுகம் வரை தனியார் பஸ் ஒன்று இயங்கிக்
கொண்டிருந்தது.
அது தற்போது இயக்கப்படாமல் உள்ளது. எனவே மாணவர்களின் நலன்
கருதி கோரம்பள்ளத்திலிருந்து தினமும் காலை, மாலை நேரங்களில் கூடுதலாக அரசு
பஸ் இயக்க வேண்டும். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் கோரம்பள்ளத்தில்
செயல்பட்டு வருகிறது. இங்கு தினந்தோறும் ஏராளமானோர் பதிவு செய்ய
வருகின்றனர். இங்கு கழிப்பிட வசதியில்லாமல் பதிவு செய்ய வருவோர் மிகவும்
சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். பொது கழிப்பிட வசதி செய்து தரப்பட
வேண்டும் உட்பட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மாநாட்டில் புதிய
கிளை செயலாளராக ராஜ் தேர்ந்தெடுக்கப்பட்டார். கிளை உறுப்பினர்கள் பலர்
கலந்து கொண்டனர்.