ஊராட்சித் தலைவர் மீது போலீசில் வழக்கு
ஊராட்சித் தலைவர் மீது போலீசில் வழக்கு
ஊராட்சித் தலைவர் மீது போலீசில் வழக்கு
ADDED : செப் 19, 2011 11:29 PM
செஞ்சி : வேலை உறுதித் திட்டத்தில் முறைகேடு செய்ததாக, ஊராட்சித் தலைவர் உள்ளிட்ட நான்கு பேர் மீது, போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.விழுப்புரம் மாவட்டம், வல்லம் ஒன்றியத்திற்கு உட்பட்டது, குறிஞ்சிப்பை கிராமம்.
இந்த ஊராட்சியில், கடந்த 2006ம் ஆண்டு முதல் நடந்த வேலை உறுதித் திட்டத்தில், முறைகேடு நடந்ததாகப் புகார் எழுந்தது. இதுகுறித்து, உதவித் திட்ட அலுவலர் நடத்திய விசாரணையில், 4 ஆயிரத்து 820 ரூபாய் முறைகேடு நடந்தது தெரியவந்தது.இதையடுத்து, ஊராட்சித் தலைவர் காளியம்மாள், துணைத் தலைவர் ராஜேஸ்வரி, ஊராட்சி உதவியாளர் இளவரசி, மக்கள் நலப் பணியாளர் வாசுகி ஆகியோர் மீது, வல்லம் ஒன்றிய பி.டி.ஓ., கலியமூர்த்தி, செஞ்சி போலீசில் புகார் செய்தார்.இப்புகார் மீது, சப்-இன்ஸ்பெக்டர் சுப்ரமணி மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.


