/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/பேய்க்குளம் பகுதியில் ஏக்கர் கணக்கில் நில மோசடி போலி பத்திரங்கள் தயார் செய்து விற்பனைபேய்க்குளம் பகுதியில் ஏக்கர் கணக்கில் நில மோசடி போலி பத்திரங்கள் தயார் செய்து விற்பனை
பேய்க்குளம் பகுதியில் ஏக்கர் கணக்கில் நில மோசடி போலி பத்திரங்கள் தயார் செய்து விற்பனை
பேய்க்குளம் பகுதியில் ஏக்கர் கணக்கில் நில மோசடி போலி பத்திரங்கள் தயார் செய்து விற்பனை
பேய்க்குளம் பகுதியில் ஏக்கர் கணக்கில் நில மோசடி போலி பத்திரங்கள் தயார் செய்து விற்பனை
பேய்க்குளம், செப்.19 பேய்க்குளம் அருகே நிலமோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் நிலங்களை மீட்டுத்தரக் கோரியும் வரும் 21ம் தேதி உண்ணாவிரதம் நடக்க உள்ளது.
உதாரணமாக இப்பகுதியை சேர்ந்த கோயில்பிள்ளை, சாமுவேல், இஸ்ரவேல், செல்வராஜ் ஆகியோர் இறந்து பல வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் அவர்கள் கையெழுத்து போட்டதுபோல் போலி பத்திரங்கள் தயார் செய்து நில மோசடி நடந்துள்ளது. இவ்வாறாக படித்தவர்கள் கைநாட்டு போட்டதாகவும், 75வயது உள்ள நபர் போட்டோவில் 20 வயது நபர் போட்டோவும் ஒட்டி மோசடி நடந்துள்ளது. இந்நிலங்கள் அனைத்தையும் கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த ஒருவருக்கு பட்டா செய்யப்பட்டுள்ளது. இந்த நிலமோசடியில் ஈடுபட்டவர்களுக்கு சில முக்கிய அரசியல் பிரமுகர் அடைக்கலம் கொடுத்து வருவதாகவும், இதனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் தடை ஏற்பட்டுள் ளதாகவும் நிலத்தை பறிகொடுத்தவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்நிலை யில் நிலத்தை அபகரிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி“ பொதுமக்கள் அதிருப்தி அடைந்து வரும் 21ம் தேதி பனைக்குளத்தில் உண்ணாவிரதம் நடத்த முடிவு செய்துள்ளனர்.


