Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/வடமங்கலத்தில் இ.எஸ்.ஐ., மருத்துவ முகாம்

வடமங்கலத்தில் இ.எஸ்.ஐ., மருத்துவ முகாம்

வடமங்கலத்தில் இ.எஸ்.ஐ., மருத்துவ முகாம்

வடமங்கலத்தில் இ.எஸ்.ஐ., மருத்துவ முகாம்

ADDED : செப் 15, 2011 04:07 AM


Google News
வில்லியனூர்:வில்லியனூர் அருகே உள்ள வடமங்கலம் ஓம் சக்தி திருமண நிலையத்தில் இ.எஸ்.ஐ., சார்பில் பதிவு பெற்ற தனியார் நிறுவன தொழிலாளர் குடும்பத்தினருக்கு மருத்துவ முகாம் நடந்தது.முகாமை சுகாதார துறை துணை இயக்குனர் நாயுடு, இ.எஸ்.ஐ., மண்டல இயக்குனர் மீரான், புதுச்சேரி இ.எஸ்.ஐ., மருத்துவ கமிஷனர் டாக்டர் கோவிந்தராஜலு, துணை இயக்குனர் சங்கரலிங்கம், மருத்துவ கண்காணிப்பாளர் சோழசயணம், டாக்டர் நாராயணன் ஆகியோர் பங்கேற்று முகாமைத் துவக்கி வைத்தனர்.முகாமில் சென்னை செட்டிநாடு சிறப்பு மருத்துவமனை டாக்டர் குழுவினர், வாசன் ஐ கேர் மருத்துவ குழுவினர், புதுச்சேரி இ.எஸ்.ஐ., மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு 250க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு சிகிச்சையளித்தனர்.

முகாமில் பொது மருத்துவம், கண், இ.சி.ஜி., ஸ்கேன் உள்ளிட்ட மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us