ADDED : செப் 08, 2011 10:34 PM
காளையார்கோவில் : காளையார்கோவில் அருகே ஆண்டிச்சியூரணி புனித ஆரோக்கிய அன்னை ஆலய தேர்பவனி நடந்தது.
ஆலய விழா, செப்.,1ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சிறப்பு திருப்பலி, நற்செய்தி கூட்டங்கள் நடந்தது. முக்கிய நிகழ்வான நேற்று புனித அடைக்கல அன்னை ஆலயத்தில் இருந்து, புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்திற்கு தேரில் பவனி வந்தார். சிவகங்கை மறை மாவட்ட முதன்மை குரு ஜோசப் லூர்துராஜா தலைமை வகித்தார். அன்ன தானம் நடந்தது. பங்குதந்தை சேசுராஜ் கிறிஸ்டி, பங்கு இறைமக்கள், பேரவையினர் ஏற்பாட்டை செய்தனர்.