ADDED : ஆக 15, 2011 10:15 AM
கரூர் : கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் நாட்டின் 65வது சுதந்திர தின விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
மாவட்ட கலெக்டர் ஷோபனா தேசிய கொடியை ஏற்றி வைத்தார். வருவாய்த்துறை அலுவலர் கிறிஸ்துராஜ் வரவேற்புரை ஆற்றினார். பின்னர் சுதந்திரத்திற்காக பாடுபட்ட தியாகிகள் பாராட்டப்பட்டனர். பள்ளி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றது. இதே போன்று கிருஷ்ணராயபுரம் தொகுதியில் எம்.எல்.ஏ., காமராஜ் தேசிய கொடியை ஏற்றி வைத்து பள்ளி குழந்தைகளுக்கு இனிப்புக்கள் வழங்கினார். மாவட்ட காங்கிரஸ் இயக்கத்தின் சார்பில் மகாத்மா காந்தி, காமராஜர் ஆகியோரின் சிலைகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சி சார்பில் அமைதிப் பேரணியும் நடத்தப்பட்டது. இதே போன்று மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது.