Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/துல்லிய பண்ணையம் திட்டம் 4ல் ஒரு பங்காக குறைப்பு

துல்லிய பண்ணையம் திட்டம் 4ல் ஒரு பங்காக குறைப்பு

துல்லிய பண்ணையம் திட்டம் 4ல் ஒரு பங்காக குறைப்பு

துல்லிய பண்ணையம் திட்டம் 4ல் ஒரு பங்காக குறைப்பு

ADDED : ஆக 28, 2011 11:06 PM


Google News

கடலூர் : துல்லிய பண்ணையம் அமைக்கும் திட்டத்தில் தமிழக அரசு பயனாளிகள் எண்ணிக்கையை 4ல் ஒரு பங்காக குறைத்துள்ளது.

குறைந்த தண்ணீரைக் கொண்டு சிறந்த மகசூல் எடுக்கும் திட்டம் தான் துல்லிய பண்ணையம் திட்டம். இத்திட்டத்தில் சொட்டு நீர் பாசனம் மூலம் பயிருக்குத் தேவையான குறைவான தண்ணீரை பயன்படுத்தி சிறந்த மகசூலை பெறலாம். தண்ணீர் பற்றாக்குறை உள்ள தர்மபுரி, சேலம், ஈரோடு உள்ளிட்ட பல மாவட்டங்களில் இத்திட்டம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதேப்போன்று இத்திட்டத்தினால் பயிருடன் வளரும் 'களை' கள் கட்டுப்படுத்தப்படுவதால் விளைச்சல் அதிகரிக்கும். கடந்த தி.மு.க., ஆட்சி காலத்தில் 65 சதவீதம் மானிய உதவியுடன் திட்டம் செயல்படுத்தப்பட்டது. ஆண்டுதோறும் மாவட்டத்தில் 400 எக்டர் பரப்பில் இத்திட்டம் செயல்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அ.தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்றவுடன் இத்திட்டத்திற்காக 100 சதவீதம் அரசு மானியத்தடன் செயல்படுத்தப்படும் என முதல்வர் அறிவித்தார். ஆனால் 400 எக்டர் பரப்பு என இருந்ததை குறைத்து வெறும் 100 எக்டராக மாற்றப்பட்டுள்ளது. இதனால் துல்லிய பண்ணையம் அமைக்க விவசாயிகளிடையே கடும் போட்டி இருக்கும் என எதிர்பாக்கப்படுகிறது.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us