இது நாட்டுக்கு நல்லதல்ல; ராகுலுக்கு கங்கனா 'வார்னிங்'
இது நாட்டுக்கு நல்லதல்ல; ராகுலுக்கு கங்கனா 'வார்னிங்'
இது நாட்டுக்கு நல்லதல்ல; ராகுலுக்கு கங்கனா 'வார்னிங்'
ADDED : ஆக 02, 2024 01:46 PM

புதுடில்லி: பிரதமர் மோடி குறித்து விமர்சனம் செய்த எதிர்க்கட்சி தலைவர் ராகுலுக்கு பா.ஜ., எம்.பி., கங்கனா ரனாவத் பதிலடி கொடுத்துள்ளார்.
அண்மையில் பார்லிமெண்டில் பட்ஜெட் மீதான விவாதத்தின் போது பேசிய எதிர்க்கட்சி தலைவர் ராகுல், 'வன்முறையும், பயமும் நிரம்பிய சக்கர வியூகத்தை பிரதமர் மோடி நெஞ்சில் தாங்கி இருக்கிறார். இந்த சக்கர வியூகத்தில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, அதானி, அம்பானி உள்ளிட்டோர் இருக்கின்றனர்' எனப் பேசினார்.
கங்கனா பேட்டி
ராகுலின் இந்தப் பேச்சுக்கு பா.ஜ., எம்.பி.,க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், மாண்டி தொகுதி பா.ஜ., எம்.பி.,யும், நடிகையுமான கங்கனா ரனாவத், ராகுலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளர்.
பார்லி வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ராகுல் பற்றி என்ன சொல்வது? அவர் பேசிய பேச்சுக்களில் எந்த அர்த்தமும் இல்லை. ராகுல் பயன்படுத்திய வார்த்தைகள் மிகவும் கண்டிக்கத்தக்கது. இது நாட்டுக்கு நல்லதல்ல. காங்கிரஸ் குறித்து எம்.பி., அனுராக் தாகூர் சொன்னதை நினைவுபடுத்த விரும்புகிறேன்.
பிளவுபடுத்த முயற்சி
நாட்டை பிளவுபடுத்தி, அதன்மூலம் பலனடைய காங்கிரஸ் முயற்சிக்கிறது. இது இப்போது நடப்பதல்ல. நேரு பிரதமராக இருந்த போதில் இருந்தே, இந்த வேலையைத் தான் காங்கிரஸ் செய்து வருகிறது, எனக் கூறினார்.