/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/முதல்வர் அறிவிப்பு அனிபால் நேரு நன்றிமுதல்வர் அறிவிப்பு அனிபால் நேரு நன்றி
முதல்வர் அறிவிப்பு அனிபால் நேரு நன்றி
முதல்வர் அறிவிப்பு அனிபால் நேரு நன்றி
முதல்வர் அறிவிப்பு அனிபால் நேரு நன்றி
ADDED : ஆக 30, 2011 11:33 PM
புதுச்சேரி : பணி நீக்கம் செய்யப்பட்ட 4 ஆயிரம் ஊழியர்களுக்கு மீண்டும் வேலை வழங்குவதாக உறுதியளித்த முதல்வர் ரங்கசாமிக்கு, நகர மன்ற கவுன்சிலர்கள் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் அனிபால் நேரு நன்றி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் கடந்த சட்டசபை தேர்தலுக்கு முன்பு, காங்., அரசு 4 ஆயிரம் பேரை வேலைக்கு அமர்த்தினர். இதையெடுத்து ஆட்சியை பிடித்த ரங்கசாமி தலைமையிலான என்.ஆர். காங்., அரசு சம்பள முரண்பாடு காரணமாக 4 ஆயிரம் பேரையும் பணி நீக்கம் செய்தது. பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் தொடர்ந்து பல கட்ட போராட்டங்களை நடத்தினர். காங்.,-தி.மு.க., கூட்டணி கட்சியினர் பணி நீக்கம் செய்யப்பட்டவர்களை மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் நடந்த சட்டசபை கூட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் வேலை வழங்கி வழி வகை செய்யப்படும் என்று உறுதியளித்துள்ளார். பணி நீக்கம் செய்யப்பட்டவர்களின் வாழ்க்கையில் மீண்டும் விளக்கேற்றிய முதல்வர் ரங்கசாமிக்கு நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


