Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/வழித்தடம் மாறியது ஏனோ?

வழித்தடம் மாறியது ஏனோ?

வழித்தடம் மாறியது ஏனோ?

வழித்தடம் மாறியது ஏனோ?

ADDED : ஆக 20, 2011 11:48 PM


Google News
உடுமலை:உடுமலை-பொள்ளாச்சி வழித்தடத்திலிருந்து, வேறு பகுதிக்கு மாற்றப்பட்ட டவுன் பஸ்சை, மீண்டும் இயக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.

உடுமலையிலிருந்து பொள்ளாச்சி செல்லும் வழித்தடத்தில், பூலாங்கிணறு, முக்கோணம், சடையகவுண்டன்புதூர் உட்பட 15க்கும் அதிகமான கிராமங்கள் உள்ளன; இப்பகுதியினர், பொள்ளாச்சி செல்ல டவுன் பஸ்களை மட்டுமே நம்பியுள்ளனர். இந்நிலையில், வழித்தடத்தில் இயக்கப்பட்டு வந்த வழித்தட எண் 7 ஏ/51 பஸ், முன்னறிவிப்பின்றி, வேறு வழித்தடத்தில் மாற்றி விடப்பட்டது. மாலை 4.50 மணிக்கு வந்து கொண்டிருந்த பஸ், பள்ளி மாணவ, மாணவியருக்கு பயன்பட்டு வந்தது. இந்த வழித்தடத்தில், பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us