இலங்கை அகதிகளை ஏற்க நியூசிலாந்து மறுப்பு
இலங்கை அகதிகளை ஏற்க நியூசிலாந்து மறுப்பு
இலங்கை அகதிகளை ஏற்க நியூசிலாந்து மறுப்பு
UPDATED : ஜூலை 12, 2011 05:55 PM
ADDED : ஜூலை 12, 2011 03:10 PM
மெல்போர்ன்: இலங்கை தமிழ் மக்களை அகதிகளாக நியூசிலாந்து ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
நியூசிலாந்துக்கு அகதிகளாக செல்லும் வழியில் இலங்கை தமிழர்கள் 87 பேரை இந்தோனேஷியா கடற்படையினர் கைது செய்தனர். ஆனால் இலங்கை தமிழர்கள் கப்பலில் இறங்க மறுத்து விட்டனர். அவர்கள் நியூசிலாந்துக்கு செல்ல வேண்டும் என நியூசிலாந்து நாட்டின் கொடியை பறக்க விட்டுள்ளனர். இந்த கப்பல் இந்தோனேஷியாவின் டாங்ஜங் பினாங் தளத்தில் நங்கூரமிட்டுள்ளது. இலங்கை தமிழர்கள் நியூசிலாந்திற்கு அகதிகளாக செல்வது தெரியவந்தது. இந்நிலையில் தமிழ் மக்களை அகதிகளாக நியூசிலாந்து ஏற்றுக்கொள்ளாது என தகவல்கள் வெளியாகியுள்ளன. இது பற்றி நியூசிலாந்து அமைச்சர் ஜோனத்தன் கோல் மேன் கூறுகையில், கப்பலில் உள்ளவர்களை ஏற்றுக்கொள்ளும் எண்ணமில்லை என்றார்.


