/உள்ளூர் செய்திகள்/தேனி/ஊரக விளையாட்டு மைதானங்கள் அமைத்ததில் அரசு நிதி வீண்ஊரக விளையாட்டு மைதானங்கள் அமைத்ததில் அரசு நிதி வீண்
ஊரக விளையாட்டு மைதானங்கள் அமைத்ததில் அரசு நிதி வீண்
ஊரக விளையாட்டு மைதானங்கள் அமைத்ததில் அரசு நிதி வீண்
ஊரக விளையாட்டு மைதானங்கள் அமைத்ததில் அரசு நிதி வீண்
ADDED : ஜூலை 11, 2011 03:03 AM
தேனி : ஊரக விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்பட்டதிலும், ஊராட்சி பொது கழிப்பிடங்கள் பராமரிக்கப்படாததாலும், அதில் செலவிடப்பட்ட அரசு நிதி வீணாகி வருகிறது.
கடந்த தி.மு.க., ஆட்சியில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், திட்டம் செயல்படுத்தப்படும் அனைத்து ஊராட்சிகளிலும், ஊரக விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்பட்டன.
பள்ளிகளில் அமைப்பதாக இருந்தால் ஒன்றரை லட்சம் ரூபாயும், ஊர்ப்பகுதிகளில் அமைப்பதாக இருந்தால் ஒரு லட்சம் ரூபாயும் ஒதுக்கப்பட்டு, விளையாட்டு மையங்கள் அமைக்கப்பட்டன.
சேதம்: தேனி மாவட்டத்தில் 130 ஊராட்சிகளிலும், இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அனைத்து ஊராட்சிகளிலும் ஊரக விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட பகுதிகளில் இவை பயன்பாடின்றி, சேதமடைந்தும், புதர் மண்டியும் கிடக்கின்றன. இவற்றை பராமரிப்பதற்காக ஊராட்சி பொது நிதியில் இருந்து ஆண்டுக்கு பத்தாயிரம் ரூபாய் செலவு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பல ஊராட்சிகளில் பராமரிப்பு பணிகள் நடக்கவில்லை.
வீண்: பல ஊராட்சிகளில், சிறுவர் விளையாட்டு ஊஞ்சல்களில் கம்பிகள் மட்டுமே உள்ளன. சறுக்குகள் சேதமடைந்துள்ளன. இதற்காக செலவிடப்பட்ட நிதி பராமரிப்ப இல்லாததால் முழுமையாக வீணாகி விட்டது. தேசிய முழு ஊரக சுகதார திட்டம், எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் பொது கழிப்பிடங்கள் கட்டி தரப்பட்டுள்ளன. இவை அனைத்தும் பராமரிப்பு இல்லாததால் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.