/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/பாவை கலை அறிவியல் கல்லூரி முதலாம் ஆண்டு வகுப்பு துவக்கம்பாவை கலை அறிவியல் கல்லூரி முதலாம் ஆண்டு வகுப்பு துவக்கம்
பாவை கலை அறிவியல் கல்லூரி முதலாம் ஆண்டு வகுப்பு துவக்கம்
பாவை கலை அறிவியல் கல்லூரி முதலாம் ஆண்டு வகுப்பு துவக்கம்
பாவை கலை அறிவியல் கல்லூரி முதலாம் ஆண்டு வகுப்பு துவக்கம்
ADDED : ஜூலை 11, 2011 02:38 AM
ராசிபுரம்: பாவை கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியின் முதலாம் ஆண்டு வகுப்புகள் துவக்க விழா நடந்தது.
கல்வி நிறுவன தாளாளர் மங்கை குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.
முதல்வர் முத்தமீனாட்சி வரவேற்றார். விநாயகர் மற்றும் சரஸ்வதிக்கு பூஜை செய்யப்பட்டது. கல்வி நிறுவன தலைவர் ஆடிட்டர் நடராஜன் தலைமை வகித்து பேசியதாவது: பெண்மை போற்றும்படி நடந்து கொண்டு விட்டால், சமுதாயம் அமைதியோடும், சிறப்போடும் விளங்கும். இங்கு அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஒழுக்கம் மற்றும் மதிப்பீடுகளுடன் கூடிய மகத்தான கல்வி வழங்கப்படுகிறது. இக்கல்வியாண்டு முதல் ஐ.ஏ.எஸ்., சி.ஏ., குரூப் 1, 2 தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது.
இந்த வாய்ப்புகளை, மாணவியர்கள் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பெண்கள் தனித்துவம் பெற்றவர்களாக வளர வேண்டும். வாழ்க்கையில் தைரியத்தோடும், துணிச்சலோடும், முயற்சியோடும் பெண்கள், தன் சொந்த காலில் நின்று மதிப்புடையவர்களாக வாழவேண்டும். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், மாணவியர் உள்பட பலர் பங்கேற்றனர்.