Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/உணவு, மருந்துகளில் அதிக அளவில் கலப்படம்

உணவு, மருந்துகளில் அதிக அளவில் கலப்படம்

உணவு, மருந்துகளில் அதிக அளவில் கலப்படம்

உணவு, மருந்துகளில் அதிக அளவில் கலப்படம்

ADDED : அக் 02, 2011 01:41 AM


Google News

புதுச்சேரி : 'உணவு மற்றும் மருந்துப் பொருட்களில் அதிக அளவில் கலப்படம் உள்ளது' என, திட்டம் மற்றும் ஆராய்ச்சித் துறை இயக்குனர் கனகசபை கூறினார்.கடந்த 1986ம் ஆண்டு நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் கொண்டு வரப்பட்டது.

இதன் 25ம் ஆண்டு நிறைவையொட்டி, மத்திய நுகர்வோர் அமைச்சகம், இந்திய பொது நிர்வாகம் (புதுச்சேரி கிளையும்) இணைந்து வெள்ளி விழா மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு குறித்த இரண்டு நாள் கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்திருந்தன. இதன் துவக்க விழா, திட்டம் மற்றும் ஆராய்ச்சித் துறை கருத்தரங்கக் கூடத்தில் நடந்தது. அசோகன் வரவேற்றார். இந்திய பொது நிறுவன, புதுச்சேரி கிளை சேர்மன் தனபால், பொது நிர்வாக அதிகாரி சுரேஷ் மிஸ்ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் துறை சிறப்பு செயலர் மேத்யூ சாமுவேல் துவக்கி வைத்தார்.திட்டம் மற்றும் ஆராய்ச்சித் துறை இயக்குனர் கனகசபை பேசுகையில், 'ஒவ்வொரு பொதுமக்களும் நுகர்வோரே. ஒவ்வொரு நுகர்வோருக்கும் தன்னைப் பற்றிய விவரம் தேவை. அடிப்படை விழிப்புணர்வு தெரிந்த நுகர்வோர், மற்றவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஒவ்வொரு இடங்களிலும் கலப்படம் உள்ளது. குறிப்பாக உணவுப் பொருட்கள், மருந்து பொருட்களில் அதிக அளவில் கலப்படம் உள்ளது.இவற்றை தடுக்க பொதுமக்கள் குரல் கொடுக்க வேண்டும். இதற்காக வலிமையான இயக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்றார். விழாவில் கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us