/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/திருத்தங்கலில் பஸ் ஸ்டாண்ட் தி.மு.க., காங்., வெளிநடப்புதிருத்தங்கலில் பஸ் ஸ்டாண்ட் தி.மு.க., காங்., வெளிநடப்பு
திருத்தங்கலில் பஸ் ஸ்டாண்ட் தி.மு.க., காங்., வெளிநடப்பு
திருத்தங்கலில் பஸ் ஸ்டாண்ட் தி.மு.க., காங்., வெளிநடப்பு
திருத்தங்கலில் பஸ் ஸ்டாண்ட் தி.மு.க., காங்., வெளிநடப்பு
ADDED : செப் 11, 2011 11:21 PM
சிவகாசி : திருத்தங்கல் நகராட்சியில் பஸ் ஸ்டாண்ட் இட தேர்வு குறித்து மக்களிடம் மாறுபட்ட கருத்து நிலவுவதால் ,பஸ் ஸ்டாண்ட் அமைப்பதில் சிக்கலாக இருந்தது.
தற்போது பஸ் ஸ்டாண்ட் அமைப்பதில் அரசு தீவிரம் காட்டி வருகிறது. ஏற்கனவே திட்டமிட்ட இடமான விருதுநகர் - திருத்தங்கல் ரோட்டில் பஸ் ஸ்டாண்ட் அமைக்க பணிகள் துரிதப்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கான 87.50 சென்ட் இடத்தை யொட்டிய பயன்பாடற்ற ஊரணி இடத்தை சேர்த்து , ஒரு ஏக்கர் 84 சென்ட் இடத்தில் பஸ் ஸ்டாண்ட் அமைக்க, நகராட்சி தீர்மானம் நிறைவேற்றி தர அரசு கோரியது. அதன்படி நகராட்சி கூட்டம் தலைவர் விஜி தலைமையில் நடந்தது. இதற்கு காங்கிரஸ் கவுன்சிலர் சாலை புஷ்பம், தி.மு.க., கவுன்சிலர்கள் ரவிசெல்வம், லட்சுமி, மந்திரிகுமார், ஜெயலட்சுமி, குருசாமி எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர். அ.தி.மு.க., தே.மு.தி.க., கவுன்சிலர்கள் உள்பட 13 பேர் கொண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.