/உள்ளூர் செய்திகள்/தேனி/பட்டா வழங்காவிட்டால் "பந்த்' வர்த்தகர் சங்கம் முடிவுபட்டா வழங்காவிட்டால் "பந்த்' வர்த்தகர் சங்கம் முடிவு
பட்டா வழங்காவிட்டால் "பந்த்' வர்த்தகர் சங்கம் முடிவு
பட்டா வழங்காவிட்டால் "பந்த்' வர்த்தகர் சங்கம் முடிவு
பட்டா வழங்காவிட்டால் "பந்த்' வர்த்தகர் சங்கம் முடிவு
ADDED : செப் 07, 2011 10:36 PM
மூணாறு : இடுக்கி மாவட்டத்தில் பல தலைமுறைகளாக வசித்து வரும் வியாபாரிகளுக்கும்,விவசாயிகளுக்கும், அக்டோபர் இறுதிக்குள் பட்டா வழங்காவிட்டால், நவம்பர் 1 முதல் மாவட்ட அளவில் 'பந்த்' நடத்த வர்த்தகர் சங்கம் முடிவு செய்துள்ளது.கேரளா வியாபாரி,விவசாயி ஏகோபன சமிதி எனும் வர்த்தக சங்கத்தின் செயற்குழு கூட்டம் மூணாறில்,மாவட்ட தலைவர் மாரியில் கிருஷ்ணன்நாயர் தலைமையில் நடந்தது.மாவட்ட துணைத்தலைவர்கள் ஜெபகுமார்சைமன்,வர்க்கீஸ் ஜார்ஜ்,சன்னிபைம்பள்ளி,செயலாளர் மோகனன் உட்பட பலர் பங்கேற்றனர்.
மாவட்ட தலைவர் மாரியில் கிருஷ்ணன்நாயர் கூறியதாவது: இடுக்கி மாவட்டத்தில் மூணாறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பல தலைமுறைகளாக வசித்து வரும் வியாபாரிகளும்,விவசாயிகளும் 1977ம் ஆண்டுக்கு முன் கைவசம் வைத்துள்ள நிலங்கள், வீடுகள்,வர்த்தக நிறுவனங்கள் போன்றவற்றிற்கு அரசு நிபந்தனையின்றி பட்டா வழங்க வேண்டும்.இதற்காக இரண்டு மாதங்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதற்குள் வழங்காவிட்டால் நவம்பர் முதல் தேதி மாவட்ட அளவில் 'பந்த்' நடத்தப்படும்,என்றார்.