/உள்ளூர் செய்திகள்/கடலூர்/முன்விரோத தகராறு: 30 பேர் மீது வழக்குமுன்விரோத தகராறு: 30 பேர் மீது வழக்கு
முன்விரோத தகராறு: 30 பேர் மீது வழக்கு
முன்விரோத தகராறு: 30 பேர் மீது வழக்கு
முன்விரோத தகராறு: 30 பேர் மீது வழக்கு
ADDED : செப் 05, 2011 11:48 PM
பரங்கிப்பேட்டை: முன்விரோதம் காரணமாக அரசு பஸ்சை வழிமறித்து மூன்று பேரை தாக்கிய 30 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
பரங்கிப்பேட்டை அடுத்த சாமியார்பேட்டை மற்றும் புதுப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர்களுக்குள் பஸ்சில் ஏற்பட்ட தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சிதம்பரத்தில் இருந்து சாமியார்பேட்டைக்குச் சென்ற அரசு பஸ்சை புதுப்பேட்டையைச் சேர்ந்தவர்கள் பஸ் நிறுத்தத்தில் நிறுத்தி பஸ்சில் பயணம் செய்த புதுக்குப்பத்தைச் சேர்ந்த நாகராஜ், 45, சாமியார்பேட்டையைச் சேர்ந்த தைலம்பை, லலிதா, பிச்சாவாபிள்ளை ஆகிய மூன்று பேரைத் தாக்கினர். இதுகுறித்து நாகராஜ், தைலம்மை தனித்தனியாக கொடுத்த புகாரின் பேரில் பரங்கிப்பேட்டை இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் வழக்குப் பதிந்து புதுப்பேட்டையை சேர்ந்த பிரபாகரன், குட்டியாண்டி, ரவி, குமரன், பிரகாஷ், பாலு, கந்தன், ஏழகுடியான் உட்பட 30 பேர் மீது வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.