/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் கபூ-ரியூ கராத்தே பள்ளி சாதனைகராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் கபூ-ரியூ கராத்தே பள்ளி சாதனை
கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் கபூ-ரியூ கராத்தே பள்ளி சாதனை
கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் கபூ-ரியூ கராத்தே பள்ளி சாதனை
கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் கபூ-ரியூ கராத்தே பள்ளி சாதனை
ADDED : செப் 03, 2011 01:42 AM
தூத்துக்குடி:நாகர்கோவிலில் நடந்த ஆல் இந்தியா சாம்பியன்ஷிப் கராத்தே போட்டியில் கபூ-ரியூ கராத்தே பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனர்.
ஜப்பான் ஜிட்டோரியோ கராத்தே பயிற்சி பள்ளி நடத்திய 13வது ஆல் இந்தியா
கராத்தே சாம்பியன்ஷிப் 2011 நாகர்கோவிலில் நடந்தது. பல்வேறு மாவட்டங்களை
சார்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட கராத்தே மாணவ, மாணவியர்கள் இப்போட்டியில்
கலந்து கொண்டனர். மேலும் இப்போட்டியில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த
கபூ-ரியூ ஆல் இந்தியா கராத்தே பயிற்சி பள்ளி மாணவர்கள் 15 பேர் கலந்து
கொண்டனர். 25 கிலோ ஆண்கள் எடை பிரிவில் கோகுல்நாத், 40 கிலோ ஆண்கள் எடை
பிரிவில் கிருஷ்ணா, 50 கிலோ ஆண்கள் எடை பிரிவில் சதிஸ்குமார், 55 கிலோ எடை
பிரிவில் ஜோ, 35 கிலோ பெண்கள் எடை பிரிவில் கனுகஜீவஜோதி ஆகியோர்
தங்கபதக்கமும், 30 கிலோ ஆண்கள் எடை பிரிவில் முத்துராஜ், 40 கிலோ எடை
பிரிவில் சிவகுமார், 55 கிலோ ஆண்கள் எடை பிரிவில் அரவிந்குமார், 35 கிலோ
பெண்கள் எடை பிரிவில் துர்காராணிசூர்யா ஆகியோர் வெள்ளிபதக்கமும், 35 கிலோ
ஆண்கள் எடை பிரிவில் விக்னேஷ், 35 கிலோ பெண்கள் எடை பிரிவில் முத்தாரஸ்வாதி
ஆகியோர் வெண்கலப் பதக்கமும் வென்று தூத்துக்குடி மாவட்டத்திற்கும்,
கராத்தே பயிற்சி பள்ளிக்கும் பெருமை சேர்த்தனர். வெற்றிப் பெற்ற மாணவ,
மாணவியர்களையும், பயிற்சியாளர் சென்சாய் சுரேஷ்குமாரையும், கபூ-ரியூ
கராத்தே பயிற்சி பள்ளியின் தலைமை இயக்குநர் பாட்ஷா அவர்களும், தூத்துக்குடி
மாவட்ட கராத்தே சங்க தலைவர் பாலபொய்சொல்லான் ஆகியோர் பாராட்டினர்.