/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/முன்னாள் மாஜி அமைச்சர்களை கைது செய்தாலும் கோர்ட் மூலம் சட்டப்படி தீர்வு காண்போம்முன்னாள் மாஜி அமைச்சர்களை கைது செய்தாலும் கோர்ட் மூலம் சட்டப்படி தீர்வு காண்போம்
முன்னாள் மாஜி அமைச்சர்களை கைது செய்தாலும் கோர்ட் மூலம் சட்டப்படி தீர்வு காண்போம்
முன்னாள் மாஜி அமைச்சர்களை கைது செய்தாலும் கோர்ட் மூலம் சட்டப்படி தீர்வு காண்போம்
முன்னாள் மாஜி அமைச்சர்களை கைது செய்தாலும் கோர்ட் மூலம் சட்டப்படி தீர்வு காண்போம்
ADDED : செப் 01, 2011 01:27 AM
விழுப்புரம் : அ.தி.மு.க., அரசு எத்தனை பொய் வழக்குகள் போட்டாலும், முன்னாள் அமைச்சர்களை கைது செய்தாலும் சட்டப்படி கோர்ட் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் பேசினார்.
தமிழக சட்டசபையில் ஜனநாயகம் படும்பாடு என்ற தலைøப்பில் மாவட்ட தி.மு.க., சார்பில் விழுப்புரத்தில் பொதுக்கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் பொன்முடி தலைமையில் நடந்த கூட்டத்தில் கட்சியின் பொருளாளர் ஸ்டாலின் பேசியதாவது: தி.மு.க., வரலாற்றில் மிகப் பெரிய தோல்வியை சந்தித்த போது கூட எதற்கும் அஞ்சாமல் மக்கள் பிரச்னைக்காக தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வெற்றி கண்டுள்ளோம். ஆட்சியில் இல்லாவிட்டாலும் தொடர்ந்து மக்களுக்காக தி.மு.க., மக்கள் பணியாற்றியது. சட்டசபையில் தி.மு.க., எதிர்க் கட்சியாக இல்லை என்றாலும், மக்கள் மன்றத்தில் ஆளும் கட்சியாக செயல்பட்டு வருகிறது. தி.மு.க., வின் 23 எம்.எல். ஏ.,க்களும் ஒரே இடத்தில் அமர்ந்து மக்கள் பணியாற்ற ஜெ., அரசு இடமளிக்கவில்லை. எனவே சட்டசபையில் பேச முடியாததை மக்கள் மன்றத்தில் பேசுகின்றோம். தி.மு.க., அரசு கொண்டு வந்த சமச்சீர் கல்வி திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் அவரச சட்டம் இயற்றினார். ஐகோர்ட்டும், சுப்ரீம் கோர்ட்டும் சமச்சீர் கல்வியை அமல்படுத்த உத்தரவிட்டுள்ளன. புதிய சட்டசபை வழக்கிலும் தி.மு.க., வெற்றி பெறும். தி.மு.க.,வினர் மீது பொய்யான நில மோசடி வழக்குகள் போட்டு கைது செய்வது பழிவாங்கும் செயலாகும். எத்தனை பொய் வழக்குகள் போட்டாலும், முன்னாள் அமைச் சர்களை கைது செய்தா லும் சட்டப்படி கோர்ட் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப் படும். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.