ADDED : ஆக 26, 2011 12:22 AM
புதுச்சேரி : கிருமாம்பாக்கம் அம்பேத்கர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ரத்தவகை கண்டறிதல் முகாம் நடந்தது.
கிருமாம்பாக்கம் அம்பேத்கர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு ரத்தவகை கண்டறிதல் முகாமை பள்ளியின் தேசிய பசுமைப்படை மற்றும் கஸ்தூரிபாய் செவிலியர் கல்லூரி ஆகியவை இணைந்து நடத்தியது.விரிவுரையாளர் ஐயனார் வரவேற்றார்.
பள்ளி தலைமை ஆசிரியர் செல்வராஜ் முன்னிலை வகித்தார். பள்ளித் துணை முதல்வர் ராஜேந்திரன் தலைமை தாங்கி ரத்த வகைகள் மற்றும் ரத்தம் கொடுக்கும் போது கடைபிடிக்க வேண்டிய முன் எச்சரிக்கை குறித்தும் விளக்கினார்.கஸ்தூரிபாய் செவிலியர் கல்லூரியைச் சேர்ந்த ரூபா சாந்தினி காஞ்சனா மற்றும் சுரேஷ், மாணவர்களுக்கு ரத்த வகையை கண்டறிந்து கூறினர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் கமலம் செய்திருந்தார். தேசிய பசுமைப்படை பொறுப்பாசிரியர் நவபாலன் நன்றி கூறினார்.