Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/விநாயகர் சதுர்த்தி விழா சிலைகளை கரைக்க மாவட்டத்தில் நீர் நிலைகள் விபரங்கள் அறிவிப்பு

விநாயகர் சதுர்த்தி விழா சிலைகளை கரைக்க மாவட்டத்தில் நீர் நிலைகள் விபரங்கள் அறிவிப்பு

விநாயகர் சதுர்த்தி விழா சிலைகளை கரைக்க மாவட்டத்தில் நீர் நிலைகள் விபரங்கள் அறிவிப்பு

விநாயகர் சதுர்த்தி விழா சிலைகளை கரைக்க மாவட்டத்தில் நீர் நிலைகள் விபரங்கள் அறிவிப்பு

ADDED : ஆக 24, 2011 02:33 AM


Google News

திருநெல்வேலி : ரசாயன வர்ணம் பூசப்பட்ட விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கான இடங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆண்டு தோறும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவில் களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை பூஜித்த பிறகு நீர் நிலைகளில் கரைக்கப்படும் வழக்கம் உள்ளது. ஆனால் சமீப காலமாக ரசாயன வர்ண பூச்சுகளுடன் கூடிய விநாயகர் சிலைகளை வழிபட்ட பின்னர் அவற்றை நீர் நிலைகளில் கரைப்பதால் நீர் நிலைகள் மாசுபடும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, களிமண்ணால் செய்யப்பட்டதும், சுடப்படாததும் மற்றும் எந்தவித ரசாயன கலவை அற்றதுமான விநாயகர் சிலைகளை மட்டுமே வழிபாட்டிற்கு பயன்படுத்த வேண்டும். இத்தகைய சிலைகளை நீர் நிலைகளில் கரைக்கலாம். ரசாயன வர்ணம் பூசப்பட்ட விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதை தவிர்க்க வேண்டும். கடலோரத்தில் மற்றும் ஏரிகளில் விநாயகர் சிலைகளை கரைக்காமல் கடலினுள் குறைந்தது 500 மீ தூரம் எடுத்து சென்று அரசால் அறிவிக்கப்படும் இடங்களில் மட்டுமே கரைக்க வேண்டும். கரைக்கப்படும் இடங்கள்: செங்கோட்டையில் குண்டாறு, அச்சன்புதூரில் அனுமன் ஆறு, ஊத்துமலைக்கு பாபநாசம் தாமிரபரணி ஆறு, ஆலங்குளத்திற்கு பாபநாசம் தாமிபரணி ஆறு, வாசுதேவநல்லூர், சிவகிரிக்கு ராயகிரி பிள்ளையார்மந்தை ஊரணி ஆகிய இடங்களில் கரைக்கலாம். வரும் 3ம் தேதி மாலை 4 மணி முதல் 6 மணி வரை கடையநல்லூருக்கு மேலக்கடையநல்லூர் குளம், திருவேங்கடத்திற்கு வேம்பார் கடற்கரை, வரும் 4ம் தேதி திசையன்விளை, நான்குநேரி, திருக்குறுங்குடி, களக்காடு, மூன்றடைப்பு, பழவூர், ராதாபுரம், பணகுடி, விஜயநாராயணம், வள்ளியூர் பகுதிகளுக்கு உவரி கடற்கரை, நான்குநேரி, மூலக்கைரப்பட்டி, களக்காடு, சுரண்டை தாமிபரணி ஆறு ஆகிய இடங்களில் கரைக்கலாம். முன்னீர்பள்ளம், பாளை பகுதிக்கு சிவன் கோயில் குளம், வீரவநல்லூர், திருப்புடைமருதூர், பாவூர்சத்திரம் பகுதிகளுக்கு பாவூர்சத்திரம் குளம், திப்பணம்பட்டி குளம், சங்கரன்கோவிலுக்கு தாமிரபரணி ஆறு, நெல்லை நகர் பகுதிக்கு தாமிரபரணி ஆற்றில் குறிச்சி, வண்ணார்பேட்டை பேராச்சி அம்மன் கோயில், மணிமூர்த்தீஸ்வரம் ஆகிய பகுதிகளில் விநாயகர் சிலைகளை கரைக்கலாம். வரும் 5ம் தேதி கல்லிடைக்குறிச்சிக்கு தாமிரபரணி ஆறு, வரும் 11ம் தேதி அம்பைக்கு விக்கிரமசிங்கபுரம் தாமிரபரணி ஆறு பகுதிகளில் மட்டுமே விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும். இந்த இடங்களை தவிர ஓரிரு சிலைகளை மட்டும் கரைக்க விண்ணப்பித்தவர்கள் போலீஸ் துறையினர் அனுமதித்த நாட்களில் கரைக்கலாம். விநாயகர் சதுர்த்தியை பாரம்பரிய வழக்கப்படி சுற்றுசூழலை பாதிக்காதவாறு கொண்டாட வேண்டும் என்று கலெக்டர் செல்வராஜ் தெரிவித்தார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us