கடற்கொள்ளையர் பிடியில் தேனி வாலிபர்: பெற்றோர் சென்னை பயணம்
கடற்கொள்ளையர் பிடியில் தேனி வாலிபர்: பெற்றோர் சென்னை பயணம்
கடற்கொள்ளையர் பிடியில் தேனி வாலிபர்: பெற்றோர் சென்னை பயணம்
UPDATED : ஆக 24, 2011 08:47 AM
ADDED : ஆக 24, 2011 12:12 AM
தேனி : கடற்கொள்ளையர்களிடம் சிக்கிய தேனி வாலிபரின் நிலை அறிய, அவரது பெற்றோர் சென்னை புறப்பட்டு சென்றனர்.
ஓமன் நாட்டின் துறைமுகத்தில் நின்ற கப்பலை சோமாலியா கடற்கொள்ளையர் ஆக.,20ல் கடத்தினர். அக்கப்பலில் தேனி வாலிபர் உதயராம்(27) உட்பட 27 இந்தியர்கள் உள்ளனர். உதயராம் நேற்றுமுன்தினம் தனது தங்கை அனுசுயாவிடம் போனில் பேசினார். பாதுகாப்பாக இருப்பதாகவும், மேலும் விபரங்களுக்கு சென்னையில் உள்ள தனது அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறும் கூறிவிட்டு, துண்டித்தார். இதையடுத்து, உதயராம் நிலை அறிய அவரது பெற்றோர் நேற்று சென்னை சென்றனர்.