/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/திருப்போரூரிலிருந்து அடையாறுக்கு கூடுதலாக நான்கு பஸ்கள் இயக்கம்திருப்போரூரிலிருந்து அடையாறுக்கு கூடுதலாக நான்கு பஸ்கள் இயக்கம்
திருப்போரூரிலிருந்து அடையாறுக்கு கூடுதலாக நான்கு பஸ்கள் இயக்கம்
திருப்போரூரிலிருந்து அடையாறுக்கு கூடுதலாக நான்கு பஸ்கள் இயக்கம்
திருப்போரூரிலிருந்து அடையாறுக்கு கூடுதலாக நான்கு பஸ்கள் இயக்கம்
ADDED : ஆக 23, 2011 11:20 PM
திருப்போரூர்:திருப்போரூரில் இருந்து அடையாறுக்கு, குறைந்த கட்டணத்தில்,
கூடுதல் பஸ்கள் இயக்கப்படுகிறது.திருப்போரூரில் இருந்து அடையாறுக்கு,
மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பில், மூன்று டீலக்ஸ் பஸ்களை
இயக்கப்படுகிறது. இப்பஸ்களில், அடையாறு செல்ல 13 ரூபாய் கட்டணமாக
வசூலிக்கப்பட்டது. சட்டசபை தேர்தல் முடிந்து, நன்றி தெரிவிக்க வந்த
எம்.எல்.ஏ., மனோகரனிடம், பொதுமக்கள் அடையாறு செல்ல, கூடுதல் பஸ்களை இயக்க
வேண்டும், என கோரிக்கை விடுத்தனர். அவரும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி
அளித்தார்.அவரது முயற்சியின் காரணமாக, தற்போது அடையாறிலிருந்து
திருப்போரூருக்கு கூடுதலாக, நான்கு மாநகரப் பஸ்கள் இயக்கப்படுகின்றன.
இப்பஸ்களில் அதிகபட்ச கட்டணமாக 10 ரூபாய், குறைந்தபட்ச கட்டணமாக மூன்று
ரூபாய் வசலிக்கப்படுகிறது.
அதேபோல் கோயம்பேடிலிருந்து, மதுரப்பாக்கத்திற்கு
இயக்கப்பட்ட, அரசு பஸ் தடம் எண்:70 சி, மாமம்பாக்கம் வரையும்,
பெருந்தண்டலம் கூட்ரோடு வரை இயக்கப்பட்ட மாநகரப் பஸ், முள்ளிப்பாக்கம்
வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளன.புதிய பஸ்களின் துவக்க விழா, திருப்போரூரில்,
கடந்த 20ம் தேதி நடந்தது. எம்.எல்.ஏ., மனோகரன் தலைமை தாங்கினார்.
சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சின்னையா கொடியசைத்து பஸ்களை இயக்கி
வைத்தார். மாநகரப் போக்குவரத்துக் கழகப் பொதுமேலாளர் ரங்கராஜன், பணிமனை
மேலாளர்கள் சுரேஷ், நெடுஞ்செழியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.