Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/தச்சநல்லூரில் ரயில்வே மேம்பால முதற்கட்ட பணி துவக்கம்

தச்சநல்லூரில் ரயில்வே மேம்பால முதற்கட்ட பணி துவக்கம்

தச்சநல்லூரில் ரயில்வே மேம்பால முதற்கட்ட பணி துவக்கம்

தச்சநல்லூரில் ரயில்வே மேம்பால முதற்கட்ட பணி துவக்கம்

ADDED : ஆக 19, 2011 01:31 AM


Google News

திருநெல்வேலி:தச்சநல்லூர் 29.12 கோடி ரூபாய் செலவில் ரயில்வே மேம்பாலம் கட்டப்படுகிறது.

இதற்கான முதற்கட்ட பணிகள் நடந்து வருகின்றன.நெல்லை ஜங்ஷனில் இருந்து தச்சநல்லூர் வழியாக ராமையன்பட்டி, மானூர், தேவர்குளம், சங்கரன்கோவில் மற்றும் தாழையூத்து பகுதிகளுக்கு லாரி,பஸ்,கார் மற்றும் பைக் போன்ற ஆயிரக்கணக்கான வாகனங்கள் தினமும் தச்சநல்லூர் ரயில்வே கேட்டை கடந்து சென்று வருகின்றன. இந்த ரயில்வே கேட் தினமும் சுமார் 55 தடவைக்கும் மேல் அடைக்கப்பட்டு மீண்டும் போக்குவரத்திற்காக திறக்கப்படுகிறது.



இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்களும் ஒவ்வொரு முறையும் சுமார் 10 நிமிடங்களுக்கு மேல் வாகனங்கள் காத்து கிடப்பதால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர்.



இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக தச்சநல்லூர் பகுதிகளில் ரயில்வே மேம்பாலம் கட்ட வேண்டும் என அப் பகுதி மக்கள் அரசிற்கு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து அப்பகுதியில் 29.12 கோடி ரூபாய் செலவில் ரயில்வே மேம்பாலம் கட்டுவதற்கு அனுமதியளிக்கப்பட்டது.இதைத்தொடர்ந்து மேம்பாலம் கட்டுவதற்கான முதற்கட்ட பணிகள் துவங்கியது. கடந்த சில நாட்களுக்கு முன் ரயில்வே துறை சார்பில் ரயில்வே கேட்டின் இருபுறங் களிலும் மண் பரிசோதனை நடத்தப்பட்டது.



இந்நிலையில்நெடுஞ்சாலைத்துறை சார்பில் மண் பரிசோதனை நடந்தது. மேம்பாலம் கட்டுவதற்கு மண்ணின் உறுதி தன்மை, ஈரப்பதம் கண்டறியப்படுகிறது. விரைவில் தச்சநல்லூரில் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணிகள் துவங்கப்படும் என நெடுஞ்சாலைத்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us