Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருச்சி/முதல்வர் ஜெ., துவங்கிய 3 கல்லூரியில் வகுப்பு துவக்கம்

முதல்வர் ஜெ., துவங்கிய 3 கல்லூரியில் வகுப்பு துவக்கம்

முதல்வர் ஜெ., துவங்கிய 3 கல்லூரியில் வகுப்பு துவக்கம்

முதல்வர் ஜெ., துவங்கிய 3 கல்லூரியில் வகுப்பு துவக்கம்

ADDED : ஆக 09, 2011 01:08 AM


Google News
திருச்சி: தமிழக முதல்வர் புதிதாக துவங்கி வைத்த மூன்று பாரதிதாசன் பல்கலை உறுப்புக் கல்லூரிகளில், நேற்று துவங்கிய முதல் வகுப்புகளில் மாணவ, மாணவிகள் உற்சாகமாக பங்கேற்றனர்.கிராமப்புற ஏழை மாணவர்கள் உயர் கல்வியை பெறும் வகையில், திருச்சி பாரதிதாசன் பல்கலை எல்லைக்கு உட்பட்ட, ஸ்ரீரங்கம் தொகுதியில் உள்ள இனாம்குளத்தூர், திருத்துறைப்பூண்டி மற்றும் வேதாரண்யத்தில் புதிய பல்கலை உறுப்புக் கல்லூரிகளை வீடியோ கான்ப்ரன்ஸிங் முறையில் சென்னையில் இருந்து முதல்வர் ஜெயலலிதா கடந்த சில நாட்களுக்கு முன் துவக்கி வைத்தார். மூன்று கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், 2011-12ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. இக்கல்லூரிகளில் இளநிலை முதலாமாண்டு வகுப்புகள் தற்காலிகமாக, அந்தந்த கல்லூரிகள் இயங்கி வரும் வளாகங்களில் நேற்று துவங்கியது.

திருச்சி இனாம்குளத்தூர் கல்லூரியில் நடந்த வகுப்புகள் துவக்கவிழாவில், துணைவேந்தர் மீனா பங்கேற்று மாணவர்களுக்கு அறிவுரை கூறினார். பதிவாளர் ராமசாமி, ஆட்சிமன்றக்குழு உறுப்பினர்கள் வேணுவலிங்கம், ஜோதிராமலிங்கம், அர்ச்சுனன் உட்பட பலர் பங்கேற்றனர்.முதல்நாள் பி.லிட்., ஆங்கில வகுப்பில் 58 பேர், பி.காம்., வகுப்பில் 33 பேர், பி.எஸ்.சி., கணிதம் 32 பேர், கம்ப்யூட்டர் சயின்ஸ் 25 பேர் என மொத்தம் 148 மாணவர்கள் உற்சாகமாக பங்கேற்றனர். இதே போல, மற்ற உறுப்புக் கல்லூரிகளும் கணிசமான மாணவர்கள் வருகை தந்திருந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us