/உள்ளூர் செய்திகள்/தஞ்சாவூர்/பொதுவிநியோக குறைபாடுகளை களைய தஞ்சையில் வரும் 12ல் குறைதீர் கூட்டம்பொதுவிநியோக குறைபாடுகளை களைய தஞ்சையில் வரும் 12ல் குறைதீர் கூட்டம்
பொதுவிநியோக குறைபாடுகளை களைய தஞ்சையில் வரும் 12ல் குறைதீர் கூட்டம்
பொதுவிநியோக குறைபாடுகளை களைய தஞ்சையில் வரும் 12ல் குறைதீர் கூட்டம்
பொதுவிநியோக குறைபாடுகளை களைய தஞ்சையில் வரும் 12ல் குறைதீர் கூட்டம்
ADDED : ஆக 08, 2011 02:09 AM
தஞ்சாவூர்: பொது விநியோகத் திட்டத்தில் குறைகளை களை வரும் 12ம் தேதி தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் குறைதீர் கூட்டம் நடக்கிறது என கலெக்டர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.
பொது விநியோக திட்டத்தில் காணப்படும் குறைபாடுகளை களைய, மக்களின் குறைகளை கேட்டு அவற்றை உடனுக்குடன் நிவர்த்தி செய்யவும், வட்டந்தோறும் உணவுபொருள் வழங்கல் சம்பந்தமாக குறை தீர்க்கும் கூட்டம் நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பது தொடர்பாக உணவு பொருட்கள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையால் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு, ஆகஸ்ட் 2011 மாதத்துக்கான பொது விநியோகத்திட்ட மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் தஞ்சை மாவட்டத்தில் உள்ள வட்டங்களில் கீழ் கண்டவாறு நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து தஞ்சை கலெக்டர் பாஸ்கரன் வெளியிட்டுள்ள அறிக்கை: குறைபாடுகளை ஒவ்வொரு வட்டத்திலும் உள்ள ரேசன் கடைகளில் தொடர்புடைய வட்ட வழங்கல்அலுவலரிடம் மனுக்களை அளித்து தீர்வு காணலாம். குறைதீர் கூட்டம் பிரதி மாதந்தோறும் வெவ்வேறு ஊர்களில் நடக்கும். வரும் 12ம் தேதி தஞ்சை மாவட்டம் புதுப்பட்டி, திருவையாறு தாலுகா ரெங்கபநாதபுரம், ஒரத்தநாடு தாலுகா பருத்திக்கோட்டை, கும்பகோணம் தாலுகா பாபுராஜபுரம், பாபநாசம் தாலுகா புலவலர்நத்தம், திருவிடைமருதூர் பழியஞ்சியநல்லூர், பட்டுக்கோட்டை தாலுகா சேண்டாக்கோட்டை, பேராவூரணி தாலுகா குறவன்கொல்லை ஆகிய இடங்களில் குறைதீர் கூட்டம் நடக்கிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


