ADDED : ஆக 01, 2011 02:38 AM
காரைக்கால் : காரைக்காலில் சுதந்திர தின விழா ஏற்பாடுகள் குறித்து கலெக்டர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.காரைக்கால் பை பாஸ் சாலையில் உள்ள அரசு மைதானத்தில் சுதந்திர தின விழா நடக்கவுள்ளது.
விழாவில் அமைச்சர் சந்திரகாசு கொடியேற்றுகிறார். விழா முன் ஏற்பாடுகள் குறித்து கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் பிராங்களின் லால்டின்குமா தலைமை தாங்கினார். சப்-கலெக்டர் அசோக்குமார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் போலீஸ் எஸ்.பி., வெங்கடசாமி, பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் கனகராஜ், அரசு அச்சக இணை இயக்குநர் தட்சணாமூர்த்தி, முதன்மை கல்வி அதிகாரி சுப்ரமணியன், செய்தி மற்றும் விளம் பர துணை இயக்குநர் (பொறுப்பு) கதிர்வேலாயுதம், நகராட்சி ஆணையர் ராஜராஜவீராசாமி உட்பட பல துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.