கோழி முட்டைக்குள் பலாப்பழக் கொட்டை
கோழி முட்டைக்குள் பலாப்பழக் கொட்டை
கோழி முட்டைக்குள் பலாப்பழக் கொட்டை
ADDED : ஜூலை 30, 2011 01:08 AM
மூவாற்றுப்புழா : கோழி முட்டைக்குள், மஞ்சள் கருவிற்கு பதிலாக, பலாப்பழக் கொட்டை இருந்தது.
இந்த அதிசய முட்டையை, நூற்றுக்கணக்கான மக்கள் வந்து அதிசயத்துடன் பார்த்துச் செல்கின்றனர். கேரளா மூவாற்றுப்புழா அடுத்த, கடாடி பகுதியைச் சேர்ந்தவர் மத்தாயி. இவரது வீட்டின் மாட்டுத் தொழுவத்தில், கோழிகளை வளர்த்து வருகிறார். அங்கேதான் கோழிகள் முட்டையிடுவது வழக்கம். அவ்வாறு அவரது வீட்டில், 27ம் தேதி, கோழி இட்ட முட்டையை அவர் எடுத்துப் பார்த்தார்.
சாதாரணமாக இருக்கும் அளவைவிட, சற்று சிறியதாக கோழி முட்டை காணப்பட்டது. சந்தேகமடைந்த அவர், முட்டையை உடைத்துப் பார்த்தார். முட்டைக்குள் வெள்ளைக்கரு வழக்கம்போல இருந்தது. ஆனால், மஞ்சள் கருவுக்கு பதிலாக, அதில் ஒரு பலாப்பழக் கொட்டை இருந்தது. இதைப் பார்த்த அவர், ஆச்சரியம் அடைந்தார். இத்தகவலை அறிந்த அக்கிராமத்தைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளிலிருந்தும், கோழி வளர்ப்பவர்கள் மற்றும் விவசாயிகள், நேரில் வந்து பார்த்து, வியந்தவண்ணம் செல்கின்றனர்.