/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/வாலிபால் போட்டியில் பங்கேற்க அழைப்புவாலிபால் போட்டியில் பங்கேற்க அழைப்பு
வாலிபால் போட்டியில் பங்கேற்க அழைப்பு
வாலிபால் போட்டியில் பங்கேற்க அழைப்பு
வாலிபால் போட்டியில் பங்கேற்க அழைப்பு
ADDED : ஜூலை 27, 2011 10:30 PM
சிவகாசி : சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரியில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான மாநில வாலிபால் போட்டி ஆக.1 முதல் 3ம்தேதி வரை நடக்கிறது.
போட்டிகள் நாக்-அவுட் முறையில் நடைபெறும். வெற்றி பெறும் மாணவ, மாணவியர் முதல் அணிக்கு அய்ய நாடார், ஜானகி அம்மாள் கோப்பை வழங்கப்படும். முதல் பரிசாக 5000, 2வது பரிசாக 4000, 3வது பரிசாக 3000 ரூபாய், தனிநபர் பரிசுகளும் வழங்கப்படும். பங்கேற்க விரும்பும் மாணவிகள் அணியினர் ஆக.1ம்தேதி காலை 6.30 மணிக்கும், மாணவர் அணியினர் ஆக.2ம்தேதி மாலை 4 மணிக்கு கல்லூரி மைதானத்தில் ஆஜராக வேண்டும். மேலும் விபரங்களுக்கு, பேராசிரியர்கள் அசோக் 94426 66808, சுரேஷ்பாபு 98433 24523 என்ற மொபைலில் தொடர்பு கொள்ள முதல்வர் பாஸ்கரன் கேட்டுள்ளார்.