
சிறப்பு கோர்ட்டில் முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா வாதம்: தவறு செய்ததாக என்னை குற்றம் சுமத்தினால், பிற அமைச்சர்களையும் சிறைக்குள் தள்ள வேண்டும்.
டவுட் தனபாலு: உங்க மேல எத்தனையோ குற்றச்சாட்டு சுமத்தினபோதும், 'இதைப் பத்தி நான் அவர்கிட்டயே கேட்டுட்டேன்... ராஜா, தப்பே செய்யலைங்கிறார்... அதனால தப்பு செஞ்சிருக்க மாட்டார்'னு எவ்ளோ நல்ல பிள்ளையாட்டம் பிரதமர் பதில் சொன்னார்... அவரைப் போய் காட்டிக் கொடுத்துட்டீங்களே...!
பத்திரிகைச் செய்தி: ஐகோர்ட் உத்தரவைத் தொடர்ந்து நேற்று, முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், போலீசில் சரண் அடைந்தார். 'அவர் சரணடையும்போது சட்டம்-ஒழுங்கு பாதிக்காது' என தெரிவித்த போலீசாரே, கடைகளை அடைக்க உத்தரவிட்டு, பதட்டத்தை ஏற்படுத்தியது, பொதுமக்கள், வியாபாரிகள் மத்தியில், அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
டவுட் தனபாலு: இதுல என்னங்க அதிர்ச்சி இருக்கு... 'அண்ணன் இன்னமும் அமைச்சரா தான் இருக்காரு... ஏதோ போலீஸ் ஸ்டேஷனைத் திறக்கப் போறாரு'ன்னு நினைச்சு,
பா.ஜ., அகில இந்தியத் தலைவர் நிதின் கட்காரி: இப்போது நேரடியாக, ராஜாவே கோர்ட்டில் குற்றம் சுமத்தியுள்ளார். இதன் பிறகும் மன்மோகன் சிங்கிற்கோ, சிதம்பரத்திற்கோ, அவரவர் பதவிகளில் நீடிக்கத் தகுதி இல்லை. உடனடியாக அவர்கள் ராஜினாமா செய்ய வேண்டும். ஸ்பெக்ட்ரம் ஊழலில் தி.மு.க.,வை மட்டும் பலிகடா ஆக்கிவிட்டு, காங்கிரஸ் தப்பிக்கப் பார்க்கிறது.
டவுட் தனபாலு: என்னங்க இது... 'கனிமொழியை காவல்ல வச்சிருக்கிறது நியாய