Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/டவுட் தனபாலு/ 'டவுட்' தனபாலு

'டவுட்' தனபாலு

'டவுட்' தனபாலு

'டவுட்' தனபாலு

PUBLISHED ON : மார் 12, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
மஹாராஷ்டிர மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன்: தேசிய கல்விக் கொள்கை, அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவானதே; தமிழகத்துக்கு மட்டுமல்ல. வட மாநிலத்தவர் தமிழ் கற்க விரும்பினாலும் கற்றுத் தரப்படும். யார் மீதும் மொழியை திணிக்கக் கூடாது என்பதுதான், புதிய தேசிய கல்விக் கொள்கை. குறிப்பிட்ட மொழி வேண்டாம் எனக் கூறுவதே அரசியல்தான். எந்த மொழியை, யார் படிக்க வேண்டும் என்பதை மாணவர்கள் மத்தியில் விட்டுவிட வேண்டும் என்கிறது, புதிய கல்விக் கொள்கை.

டவுட் தனபாலு: மாணவர்கள், அவங்க இஷ்டத்துக்கு பல மொழிகள் படிச்சு முன்னேறி போயிட்டா, திராவிட மாடல் அரசு திரும்ப திரும்ப ஆட்சிக்கு வர முடியுமா என்பது, 'டவுட்'தான்... அதனாலதான், மும்மொழிக் கொள்கையை முழுமூச்சா எதிர்க்கிறாங்க என்பதிலும், 'டவுட்'டே இல்லை!

தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா: தே.மு.தி.க.,வுக்கு ராஜ்யசபா 'சீட்' ஒதுக்கப்படும் என அ.தி.மு.க., தெரிவித்தது. இப்போது இல்லை என்கின்றனர். அதற்காக மனவருத்தம் எதுவும் இல்லை. அப்பிரச்னையில் என்ன நடந்தது என்பதை காலம் வரும்போது கூறுகிறேன்.

டவுட் தனபாலு: ராஜ்யசபா சீட் மறுக்கப்பட்டதும், புயலா பொங்கி எழுவீங்கன்னு பார்த்தால், பூ மாதிரி அமைதியாகிட்டீங்களே... அ.தி.மு.க.,வுக்கு எதிராக வாயை விட்டு, சட்டசபை தேர்தலில் சில சீட்கள் கிடைக்கிற வாய்ப்பை கெடுத்துக்க வேண்டாம்னு அடக்கி வாசிக்கிறீங்களோ என்ற, 'டவுட்'தான் வருது!

ம.தி.மு.க., முதன்மை செயலர் துரை வைகோ: நடிகர் விஜய், தமிழ் திரையுலகில் பிரபலமான நட்சத்திரம். அவருக்கு பின்னால், பெரிய இளைஞர் கூட்டம் உள்ளது. அவர், தன் கொள்கை, சித்தாந்தங்களை சொல்லி அரசியலுக்கு வந்து உள்ளார்; அதை வரவேற்கிறோம். மத்திய, மாநில அரசுகளை எதிர்ப்பதாக சொல்லி உள்ளார். அது, அவருடைய அரசியல் வியூகம்.



டவுட் தனபாலு: உங்களுக்கு வேண்டாத, மத்திய அரசை எதிர்த்துட்டு போகட்டும்... ஆனா, மாநில அரசை எதிர்ப்பது என்பது, அவங்க கூட்டணியில் இருக்கும் உங்களையும் சேர்த்து எதிர்ப்பதாகத்தானே அர்த்தம்... அப்படி இருந்தும், விஜய்க்கு நீங்க பாராட்டு பத்திரம் வாசிக்கிறதை பார்த்தா, 2026 சட்டசபை தேர்தலில், அவரது அணியில் ஐக்கியமாகும் எண்ணம் ஏதும் இருக்குமோ என்ற, 'டவுட்' வருதே!





      Our Apps Available On




      Dinamalar

      Follow us