/உள்ளூர் செய்திகள்/மதுரை/குண்டும் குழியுமாக மாறிய வடகாடுப்பட்டி ரோடுகுண்டும் குழியுமாக மாறிய வடகாடுப்பட்டி ரோடு
குண்டும் குழியுமாக மாறிய வடகாடுப்பட்டி ரோடு
குண்டும் குழியுமாக மாறிய வடகாடுப்பட்டி ரோடு
குண்டும் குழியுமாக மாறிய வடகாடுப்பட்டி ரோடு
ADDED : ஜூலை 24, 2011 11:49 PM
விக்கிரமங்கலம் : விக்கிரமங்கலம்-வடகாடுப்பட்டி ரோடு குண்டும் குழியுமாக உள்ளது.
இதை செப்பனிட அதிகாரிகள்
நடவடிக்கை எடுக்க வேண்டும். வடகாடுப்பட்டி, விக்கிரமங்கலத்திற்கு மதுரை, சோழவந்தானில் இருந்து அதிக பஸ்கள், வாகனங்கள் சென்று வருகின்றன. உசிலம்பட்டி குடிநீர் திட்டத்திற்காக சோழவந்தான் மண்ணாடிமங்கலம் வைகை ஆற்றில் இருந்து, வடகாடுப்பட்டி, விக்கிரமங்கலம் ரோட்டில் ராட்சத குழாய் பதிக்கப்பட்டன. இதில் ரோடு குண்டும் குழியுமாகி விட்டது. ஐந்து ஆண்டுகளாகியும் ரோடு பராமரிக்கப்படாமல் உள்ளது.