லேப்-டாப் "அபேஸ்' மர்மநபருக்கு வலை
லேப்-டாப் "அபேஸ்' மர்மநபருக்கு வலை
லேப்-டாப் "அபேஸ்' மர்மநபருக்கு வலை
ADDED : செப் 25, 2011 11:56 PM
தஞ்சாவூர்: ஆந்திர மாநிலம் ஆலத்தூரை சேர்ந்த சுப்ரமணியன் மகன் லோகேஷ் (20).
சாஸ்ரா பல்கலையில் பி.டெக்., 2ம் ஆண்டு படித்து வருகிறார். பல்கலை எதிரே உள்ள விடுதியில் தங்கியுள்ளார். நேற்று முன்தினம் லோகேஷ், தனது அறையை பூட்டிவிட்டு தஞ்சைக்கு வந்தார்.மீண்டும் விடுதிக்கு சென்றபோது, அவரது அறையின் முன்புற கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. அறையின் உள்ளே இருந்த, 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள லேப்-டாப் கம்ப்யூட்டர், ஐ-பாட் போன்ற பொருட்கள் திருடப்பட்டிருந்தன. சக மாணவர்களே இத்திருட்டில் ஈடுபட்டிருக்கலாம் என்று தெரிகிறது. இதுகுறித்து லோகேஷ் கொடுத்த புகாரில், வல்லம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, லேப்டாபை திருடிய மர்மநபரை தேடுகின்றனர். தஞ்சை மூலை அனுமார் கோவிலில் மகாளய அமாவாசை சிறப்பு வழிபாடு தஞ்சாவூர்: தஞ்சை மூலை அனுமார் கோவிலில், நாளை (27ம் தேதி) மகாளய அமாவாசையையொட்டி, சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது. தஞ்சை மேலவீதியில் மூலை அனுமார் கோவில் அமைந்துள்ளது. மூலை அனுமாருடைய இதய கமலத்தில் ராமபிரான் வாசம் செய்வதால், இக்கோவிலில் ராமருக்கென தனி சன்னதி இல்லை. மூலை அனுமாரை வழிப்பட்டால், ராமருடைய அனுக்கிரகம் முழுமையாக கிட்டும் என்பது ஐதீகம். கோவிலை 18 முறை மவுனமாக வலம் வருவதும், 18 நிமிடம் மவுனமாக தியானம் செய்வதும் பக்தர்களின் வழக்கம். சிறப்பு வாய்ந்த இத்தலத்தில், நாளை (27ம் தேதி) காலை ஏழு மணிக்கு மகாளய அமாவாசை சிறப்பு லட்ச ராமநாம ஜெபத்துடன் துவங்குகிறது. காலை 10 மணிக்கு திருமஞ்சனமும், வறுமை மற்றும் கடன் தொல்லைகளை நீக்கும் தேங்காய் துருவல் அபிஷேகமும், மாலை ஆறு மணிக்கு, பழங்களினால் சிறப்பு அலங்காரம் மூலை அனுமாருக்கு செய்யப்படுகிறது. மாலை ஆறு மணிக்கு, கிரிவலம் போல, அல்லல் போக்கும் அமாவாசை 18 வலம் வரும் நிகழ்ச்சி நடக்கிறது. இதையடுத்து, மூலை அனுமாருக்கு 1008 எலுமிச்சை பழங்கள் மாலை சாற்றி, தீபராதனை நடக்கிறது. மகாளய அமாவாசையன்று, தங்களது முன்னோர்கள் நினைவாக பழங்களை மூலை அனுமாருக்கு சமர்ப்பிப்பது வழக்கம். குறிப்பாக, கன்னி ராசிக்காரர்கள் மூலை அனுமா ரை தரிசிப்பது சிறப்புக்குரியது. வாகன பூஜை: தஞ்சையில் வாகன பூஜை செய்ய ஏற்ற அனுமன் ஸ்தலமாக, மூலை அனுமார் கோவில் விளங்குகிறது. இங்கு தங்களது புதிய மற்றும் பழைய வாகனங்களை பக்தர்கள் பூஜை செய்து வழிபடுகின்றனர். சரஸ்வதி பூஜையன்று, இக்கோவிலில் வாகனங்களை பூஜை செய்து சிதறுத்தேங்காய் உடைத்து சென்றால், விபத்துகள் ஏற்படாது என்பது ஐதீகம். வரும் அக்., 5ம் தேதி, சரஸ்வதி பூஜை விழா ஏற்பாடுகள் சிறப்பாக நடக்கிறது. ஏற்பாடுகளை, தஞ்சை அரண்மனை தேவஸ்தான பரம்பபை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே, உதவி கமிஷனர் ஞானசேகரன், கண்காணிப்பாளர் அசோகன் மற்றும் அமாவாசை வழிபாட்டு விழாக்குழுவினர் செய்கின்றனர்.