மக்கள் நலப்பணிகளை தொடர்ந்து செய்வோம்; மோடி
மக்கள் நலப்பணிகளை தொடர்ந்து செய்வோம்; மோடி
மக்கள் நலப்பணிகளை தொடர்ந்து செய்வோம்; மோடி
ADDED : ஜூன் 04, 2024 07:45 PM

புதுடில்லி: கடந்த 10 ஆண்டுகளாக மக்களுக்கு செய்த பணிகளை தொடர்ந்து செய்வோம் என பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களுக்கு தெரிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், பா.ஜ., தலைமை அலுவலகம் வந்த பிரதமர் மோடி பின்னர் கூறியது, மக்கள் தொடர்ந்து மூன்றாவது முறையாக எங்கள் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
தே.ஜ. கூட்டணி மீது மக்கள் முழுமையாக நம்பிக்கை வைத்துள்ளனர். இந்தியாவை ஆட்சியை செய்ய மூன்றாவது முறையாக நம்பிக்கை வைத்த மக்களுக்கு நன்றி . கடந்த 10 ஆண்டுகளாக செய்த மக்கள் நலப்பணிகளை தொடர்ந்து செய்வோம். எங்கள் அனைத்து காரியகர்த்தாக்களுக்கும் அவர்களின் கடின உழைப்புக்கு நான் தலை வணங்குகிறேன். அவர்களின் விதிவிலக்கான முயற்சிகளுக்கு வார்த்தைகள் ஒருபோதும் நியாயம் செய்யாது.இ்வ்வாறு அவ்வாறு பதிவிட்டு உள்ளார்.