மோசமான சாலைகளா? : பேஸ்புக்கில் புகார் கொடுங்கள்
மோசமான சாலைகளா? : பேஸ்புக்கில் புகார் கொடுங்கள்
மோசமான சாலைகளா? : பேஸ்புக்கில் புகார் கொடுங்கள்
ADDED : ஆக 05, 2011 05:46 PM
புதுடில்லி : சாலைகளின் தரம், சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில் அரசின் கொள்கைகள் உள்ளிட்டவைகளில் ஏதேனும் சந்தேகம் இருந்தால், பிரத்யேக பேஸ்புக் பக்கத்தில் தெரிவிக்கலாம் என்று மத்திய சாலை மற்றும் நெடுஞ்சாலை போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, தலைநகர் டில்லியில் நடந்த நிகழ்ச்சியில், இதற்கென உருவாக்கப்பட்ட புதிய மற்றும் பிரத்யேக பேஸ்புக் பக்கத்தை அறிமுகப்படுத்திய பின், பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த சாலை மற்றும் நெடுஞ்சாலை போக்குவரத்து துறை அமைச்சர் சி.பி. ஜோஷி கூறியதாவது, இதன்மூலம் , மக்களின் குறைகள் களையப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், பொதுமக்களும் துறையுடன் சேர்ந்து முன்னேற்றம் குறித்த விவாதங்களில் கலந்து கொள்ள வழிவகை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.