அறிவியல் ஆயிரம்
பச்சரிசியில் ஆய்வுகள்
தென் மாநிலங்களில் தான், அதிக அளவில் புழுங்கல் அரிசி பயன்படுத்தப்படுகிறது.
தகவல் சுரங்கம்
பெண்களுக்கு பிரதிநிதித்துவம்
முதன்முதலாக 1911 மார்ச் 8ல் தான், பெண்கள் தினம் அறிவிக்கப்பட்டது. இதனை சிறப்பிக்கும் வகையில் 2011ம் ஆண்டு பெண்கள் நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது. பெண்கள் சுதந்திரம், முன்னேற்றம் வளர்ந்திருந் தாலும் 'யு.என்.உமன்' என்ற தலைப்பில் அமைந்த ஐ.நா.,வின் அறிக்கை, பணியிடங்களில் பெண்கள் பாரபட்சத்துடன் நடத்தப்படுவதை சுட்டிக்காட்டுகிறது. பணியிடங்கள் தவிர, வீடுகளில் பெண்களின் மீதான வன்முறைச் செயல்கள் பதிவு செய்யப் படாமல் உள்ளன என ஐ.நா.,வின் அறிக்கை மேலும் கூறுகிறது.தெற்காசிய நாடுகளில், மற்ற நாடுகளை விட பெண்களின் நிலை மோசமாக உள்ளது. நீதித் துறை, காவல் துறை முதலியன பெண்களால் எளிதில் அணுக முடியாத வகையில் தான் இன்னும் உள்ளன. நீதித்துறை, காவல் துறையில் பெண்கள் பிரதிநிதித்துவம் போதிய அளவில் இல்லாமல் இருப்பதும் இதற்கு ஒரு காரணம் என, ஐ.நா.,வின் அந்த அறிக்கை மேலும் கூறுகிறது.