UPDATED : அக் 08, 2011 02:14 AM
ADDED : அக் 08, 2011 02:13 AM
சென்னை: சென்னையில் இருந்து திருச்சிக்கு தனியார் விமானம் ஒன்று இரவு 10.30 மணி்க்கு புறப்பட்டு சென்றது.
விமானத்தில் 13 பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் 5 பேர் பயணம் செய்தனர். இந்நிலையில் திருச்சியில் கனமழை பெய்ததன் காரணமாக விமானம் திருச்சியில் தரையிறங்க முடியாமல் மீண்டும் சென்னைக்கு திரும்பி வந்தது. விமானம் சென்னையில் தரையிறங்க முற்பட்ட போது விமானத்தின் டயர் தடீரென வெடித்தது. இவ்விபத்தில் பயணிகள் யாருக்கும் எவ்வித ஆபத்தும் இன்றி பாதுகாக்கப்பட்டனர்.


