Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருச்சி/பெருமாள் கோவிலில் ஸம்வத்ஸராதி உற்சவம்

பெருமாள் கோவிலில் ஸம்வத்ஸராதி உற்சவம்

பெருமாள் கோவிலில் ஸம்வத்ஸராதி உற்சவம்

பெருமாள் கோவிலில் ஸம்வத்ஸராதி உற்சவம்

ADDED : செப் 01, 2011 01:48 AM


Google News

மண்ணச்சநல்லூர்: மண்ணச்சநல்லூர் அருகே கோபுரப்பட்டியில் உள்ள ஆதிநாயக பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் ஓராண்டு நிறைவு முன்னிட்டு ஸம்வத்ஸராதி உற்சவம் நடந்தது.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே கோபுரபட்டியில் சிதிலமடைந்திருந்த மிகவும் பழமையான ஆதிநாயக பெருமாள் கோவில் புதுப்பிக்கப்பட்டு கடந்தாண்டு ஆகஸ்ட் 27ம் நாள் கும்பாபிஷேகம் நடந்தது.

கும்பாபிஷேகம் நடந்து ஓராண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு ஸம்வத்ஸராதி உற்சவம் நடந்தது. இதையொட்டி அனுக்ஞை, புண்யாஹவஜனம், திருமஞ்சனம், சதுஸ்தானார்ச்சனை, திருக்கல்யானம், கருட வாகன புறப்பாடு நடந்தது. மாநகர போலீஸ் கமிஷனர் மாசானமுத்து, ஆதிநாயக கைங்கர்ய சபா கமிட்டி தலைவர் ராமச்சந்திரன், கிராம கோவில் கமிட்டி தலைவர் அனந்தராமன், துணைத்தலைவர் கிருஷ்ணமூர்த்தி, செயலாளர் கார்த்திகேயன், பொருளாளர் கணேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us