/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
ADDED : அக் 04, 2011 01:21 AM
திருப்பூர் : வீரபாண்டி ஊராட்சியில் குறிப்பிட்ட பகுதிக்கு ஒரு மாதமாக குடிநீர் வினியாகம் செய்யாததை கண்டித்து காலி குடங்களுடன் பொதுமக்கள், திருப்பூர் - பல்ல டம் ரோட்டில் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டதால், ஒன்றரை மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.வீரபாண்டி ஊராட்சி, புலியங்காடு, கிருஷ்ணா நகர், ஜெ.ஜெ., நகர் பகுதிகளில் 500 குடியிருப்புகள் உள்ளன.
இதில், மூன்று குடியிருப்புகள் மூன்றாவது குடிநீர் திட்டத்தின் கீழ் பயன்பெற்று வருகின்றன. இத்திட்டத்தின் கீழ் 10 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.கடந்த ஒரு மாதமாக இப்பகுதிக்கு குடிநீர் வினியோகிக்க வில்லை. இதனால் அவதிப்பட்டு வந்த மக்கள் நேற்று ரோட் டுக்கு வந்தனர். நூற்றுக்கணக்கான பெண்கள் காலி குடங்களுடன் நேற்று காலை 10.40 மணிக்கு, திருப்பூர் - பல்லடம் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.சம்பவ இடத்துக்கு வந்த ரூரல் போலீசார் பொதுமக்களிடம் பேச்சு நடத்தினர். பொதுமக்கள் தரப்பில், 'சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வர வேண்டும்; குடிநீர் வழங்கும் வரை மறியலை கை விட மாட்டோம்,' என்று கூறி, சிறு வாகனங்கள் கூட செல்ல முடியாதவாறு ரோட்டில் அமர்ந்தனர். அதன்பின், பி.டி.ஓ., தண்டபாணி, ஊராட்சி நிர்வாகிகள் வந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு நடத்தினர்.அப்போது பொதுமக்கள், '10 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது; எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் ஒரு மாதமாக குடிநீர் வினியோகிக்கவில்லை; ஊராட்சியின் மற்ற பகுதிகளுக்கு கூட, குடிநீருடன், சப்பை தண்ணீரும் வினியோகிக்கப்படுகிறது. எங்கள் பகுதிக்கு அதுவும் இல்லை; குடிக்க தண்ணீர் கூட இல்லாமல் என்ன செய்வது,' என ஆக்ரோஷமாக பேசினர்.அதிகாரிகள் மற்றும் ஊராட்சி நிர்வாகம் தரப்பில், 'வீரபாண்டி ஊராட்சிக்கு மூன்றாவது திட்டத்தின் கீழ் 19 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்கப்படுகிறது; அதை 87 ஆயிரம் மக்கள் தொகைக்கு வினியோகிக்க வேண்டியுள்ளது. மேலும் 23 லட்சம் லிட்டர் தேவை என உள்ளாட்சி நிர்வாகம் தரப்பில் கூடுதல் குடிநீர் பெற கடும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், மாநகராட்சியுடன் இணைவதால் இழுபறியாகி வருகிறது.'அடிக்கடி தற்போது மின் தடை ஏற்படுவதால், குடிநீர் நீரேற்று நிலையம் மற்றும் நீர் உந்து நிலையங்கள் இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் குடிநீர் வினியோகம் தாமதமானது. ஊராட்சியின் மற்ற பகுதிகளில், போர்வெல் இருப்பதால், சப்பை தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. இங்கு நான்கு போர்வெல் அமைத்தும் தண்ணீர் இல்லை. எனவே, மூன்றாவது குடிநீர் திட்டத்தின் கீழ் முதலில் இப்பகுதிக்கு குடிநீர் வினியோகம் மேற்கொள்ளப்படும். இன்று மாலைக்குள் குடிநீர் வினியோகிக்கப்படும்,' என உறுதி அளித்தனர்.இதையடுத்து, பொதுமக்கள் ரோடு மறியல் போராட்டத்தை கை விட்டு, கலைந்து சென்றனர். இப்போராட்டத்தால், திருப்பூர் - பல்லடம் ரோட்டில் ஒன்றரை மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. இருபுறமும் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் காத்திருந்தன.


