"ஆப்கன் முன்னாள் அதிபரை நாங்கள் கொல்லவில்லை' : ஹக்கானி குழு தலைவர் மறுப்பு
"ஆப்கன் முன்னாள் அதிபரை நாங்கள் கொல்லவில்லை' : ஹக்கானி குழு தலைவர் மறுப்பு
"ஆப்கன் முன்னாள் அதிபரை நாங்கள் கொல்லவில்லை' : ஹக்கானி குழு தலைவர் மறுப்பு

லண்டன் : 'ஆப்கானிஸ்தான் முன்னாள் அதிபர் ரப்பானி படுகொலைக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை' என ஹக்கானி குழுவின் முக்கிய தலைவரான சிராஜூதின் ஹக்கானி தெரிவித்துள்ளார்.
ஹக்கானி குழுவிற்கும் ஐ.எஸ்.ஐ.,க்கும் இடையிலான தொடர்பு குறித்த குற்றச்சாட்டுகளால், சமீபத்தில் அமெரிக்கா, பாகிஸ்தான் உறவில் சிக்கல் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து ஆப்கன், பாக்., உறவிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், ஹக்கானி குழுவின் முக்கிய தலைவரான சிராஜூதின் ஹக்கானி நேற்று 'பி.பி.சி.,' செய்தி நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு கூறியதாவது: ரப்பானியை நாங்கள் கொலை செய்யவில்லை. இதை எங்கள் செய்தித் தொடர்பாளர்கள் பல முறை உறுதி செய்துள்ளனர். அதேபோல், அமெரிக்கா குற்றம்சாட்டுவது போல எங்களுக்கும் ஐ.எஸ்.ஐ.,க்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இவை அனைத்தும் மேற்கத்திய நாடுகளின் அரசியல் விளையாட்டு. விரைவில் இது முடிவுக்கு கொண்டு வரப்படும்.
கடந்த 1980களில், சோவியத் படைகள் ஆப்கனுக்குள் ஊடுருவிய போது நாங்கள், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுடன் தொடர்பில் இருந்தோம். ஆனால், அமெரிக்கப் படைகள் வந்த பின் அந்தத் தொடர்பை தொடரவில்லை. ஆப்கனில் பெற்ற தோல்வியை மறைக்கத்தான் அமெரிக்கா இதுபோன்ற குற்றச்சாட்டுகளை அள்ளி வீசுகிறது. இவ்வாறு சிராஜூதின் தெரிவித்தார்.


