/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/பெண்களுக்கு ஒதுக்கிய இடத்தில்திருநங்கை போட்டியிட வாய்ப்பு:தேர்தல் கமிஷன் தகவல்பெண்களுக்கு ஒதுக்கிய இடத்தில்திருநங்கை போட்டியிட வாய்ப்பு:தேர்தல் கமிஷன் தகவல்
பெண்களுக்கு ஒதுக்கிய இடத்தில்திருநங்கை போட்டியிட வாய்ப்பு:தேர்தல் கமிஷன் தகவல்
பெண்களுக்கு ஒதுக்கிய இடத்தில்திருநங்கை போட்டியிட வாய்ப்பு:தேர்தல் கமிஷன் தகவல்
பெண்களுக்கு ஒதுக்கிய இடத்தில்திருநங்கை போட்டியிட வாய்ப்பு:தேர்தல் கமிஷன் தகவல்
ADDED : செப் 27, 2011 12:03 AM
காரைக்குடி:''பெண்களுக்கென ஒதுக்கிய இடத்தில், திருநங்கைகள் போட்டியிட மனு தாக்கல் செய்யலாம்,'' என, மாநில தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
அடுத்த மாதம் நடக்க உள்ள உள்ளாட்சி தேர்தலில், போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இத்தேர்தலில் திருநங்கைகளுக்கும் வாய்ப்பு தரும் நோக்கில் மாநில தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.அதன்படி, உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு ஒதுக்கிய இடத்திற்கு, பெண்கள் போட்டியிட முன்வராத பட்சத்தில், அந்த இடத்தில் போட்டியிட திருநங்கைகள் வேட்பு மனு தாக்கல் செய்யலாம்.அதே நேரம், ஆதி திராவிடர், பழங்குடியினர் பெண்களுக்கு ஒதுக்கிய இடத்தில், அந்த பிரிவை சார்ந்த திருநங்கைகள் மட்டுமே போட்டியிடவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.