நடிகர் மோகன்லால் வீட்டில் பழங்கால பொருட்கள்?
நடிகர் மோகன்லால் வீட்டில் பழங்கால பொருட்கள்?
நடிகர் மோகன்லால் வீட்டில் பழங்கால பொருட்கள்?
ஊட்டி:ஊட்டியில் நடிகர் மோகன்லால் வீட்டில் நடந்த சோதனையின் அடிப்படையில், சென்னை அல்லது கேரளாவில் விரைவில் விசாரணை நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.சென்னை எழும்பூர், கேரள மாநிலம் திருவனந்தபுரம், கொச்சி ஆகிய பகுதிகளில் உள்ள மோகன்லாலுக்கு சொந்தமான வீடுகளில் வருமான வரித்துறையினர் மற்றும் தொல்லியல் ஆய்வு துறையினர் பல்வேறு சோதனைகளை நடத்தி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, ஊட்டி லவ்வேல் பகுதி, ஹோபார்ட் சாலை இச்சிங் காலனியில் மோகன்லாலுக்கு சொந்தமான வீட்டில், ஜூலை 22ம் தேதி கோவையில் இருந்து வருமான வரித்துறை புலனாய்வு அதிகாரிகள் ஆறு பேர் சோதனையில் ஈடுபட்டனர்.இவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், நேற்றுமுன்தினம் மீண்டும் ஊட்டி லவ்டேலில் உள்ள நடிகர் மோகன்லால் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. கேரள வருமான வரித்துறை மற்றும் தொல்லியல் துறையை சேர்ந்தவர்கள் இந்த சோதனையில் ஈடுபட்டனர்.இதில் கோவையிலிருந்து வந்து சோதனை நடத்திய அதிகாரிகள் கொடுத்த பட்டியலின் அடிப்படையில், அனைத்து பொருட்களும் ஆய்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இந்த ஆய்வுக்கு பின் சென்னை மற்றும் கேரளாவில் உள்ள மோகன்லால் வீடுகளில் நடந்த சோதனைகளை ஒப்பிட்டு இறுதி முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது.ஓணம் விடுமுறைக்கு பின் நடிகர் மோகன்லாலிடம் வருமான வரி ஏய்ப்பு மற்றும் பழங்கால பொருட்கள் சேகரிப்பு குறித்து விசாரணை நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.