ADDED : செப் 01, 2011 11:43 PM
தஞ்சாவூர்: தஞ்சாவூர் நகரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கீழவாசல் வெள்ளை விநாயகர், தொப்புள் பிள்ளையார் கோவில், தஞ்சை பெரிய கோவில், காமாட்சியம்மன் கோவில், செல்வ விநாயகர் கோவில் உட்பட பல கோவில்களில் விநாயகர் சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தஞ்சாவூர் நகரில் 29 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பள்ளது. நேற்று மூன்று இடங்களில் இருந்து விநாயகர் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு புது ஆற்றில் கரைக்கப்பட்டன. மற்றவை மூன்றாம் தேதி மாலை ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு கரைக்கப்படும்.
* திருத்துறைப்பூண்டி பொய்சொல்லா பிள்ளையார் கோவில் 21ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு காலையில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. மானைக்கால் ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் இருந்து சுனில்குமார் சேட் தலைமையில் பால்குட காவடி எடுத்து வரப்பட்டு சிறப்பு அபிஷேகமும், தொடர்ந்து சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனைக்கு பின் விநாயகர் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழா ஏற்பாடுகளை தக்கார் மதியழகன், செயல் அலுவலர் நீதிமணி, கணக்கர் சீனிவாசன் ஆகியோர் செய்திருந்தனர்.