/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/கோவையில் 20,627 பேர் "குரூப்-2' எழுத தயார்கோவையில் 20,627 பேர் "குரூப்-2' எழுத தயார்
கோவையில் 20,627 பேர் "குரூப்-2' எழுத தயார்
கோவையில் 20,627 பேர் "குரூப்-2' எழுத தயார்
கோவையில் 20,627 பேர் "குரூப்-2' எழுத தயார்
ADDED : ஜூலை 25, 2011 09:37 PM
கோவை : இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்ட குரூப்-2 தேர்வு, வரும் 30ல் தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது.
கோவையில் 20 ஆயிரத்து 627 பேர் இத்தேர்வு எழுதுகின்றனர்.தமிழ்நாடு பொது தேர்வாணையம் சார்பில், கடந்த ஜூன் 17ல் குரூப்-2 தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. பின், ரத்து செய்யப்பட்டு, ஜூலை 3ல் தேர்வு நடக்கும் என அறிவிக்கப்பட்டது. அன்றும் தேர்வு நடக்கவில்லை. இறுதியில் வரும் 30ல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கோவையில் 46 மையங்கள், பொள்ளாச்சியில் ஐந்து மையங்கள் என, மாவட்டத்தில் 41 மையங்களில் நடைபெறும் இத்தேர்வை, 20 ஆயிரத்து 627 பேர் எழுதுகின்றனர். வரும் 28 வரை தபால் மூலம் ஹால் டிக்கெட் கிடைக்காதவர்கள், இரு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் மற்றும் முகவரிச் சான்றுடன் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தகவல் பிரிவை அணுகி, இன்டெர்நெட்டில் இருந்து டவுன்லோடு செய்யப்பட்ட ஹால் டிக்கெட்டை பெற்றுக் கொள்ளலாம்.