மகா., அரசு அதிகாரி வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு: ரூ.9 கோடி ரொக்கம்; ரூ.23 கோடி வைர நகைகள் பறிமுதல்
மகா., அரசு அதிகாரி வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு: ரூ.9 கோடி ரொக்கம்; ரூ.23 கோடி வைர நகைகள் பறிமுதல்
மகா., அரசு அதிகாரி வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு: ரூ.9 கோடி ரொக்கம்; ரூ.23 கோடி வைர நகைகள் பறிமுதல்
ADDED : மே 15, 2025 07:00 PM

மும்பை: மும்பை மற்றும் ஐதராபாத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.32 கோடி மதிப்புள்ள ரொக்கம் மற்றும் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
மகாராஷ்டிரா மாநிலம் வாசை விரார் மாநகராட்சி நகரமைப்பு துணை இயக்குனர் ஒய்.எஸ்.ரெட்டி மீது கட்டுமான அனுமதியில் முறைகேடு, சட்ட விரோத பணப்பரிமாற்ற மோசடி புகார்கள் எழுந்தன. கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம், குப்பை கிடங்குக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தில், சட்ட விரோதமாக கட்டடம் கட்ட அனுமதி வழங்கியதாக, அவர் மீது வழக்கு பதியப்பட்டது.இதையடுத்து அவருக்கு சொந்தமான மும்பை, ஐதராபாத் வீடுகள், உறவினர்கள், நண்பர்கள் வீடுகள் என மொத்தம் 13 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தினர்.
இதில், 23.25 கோடி ரூபாய் மதிப்புள்ள வைர நகைகள், 9.04 கோடி ரூபாய் ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. ஏராளமான சொத்து ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடந்து வருவதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.