Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/உலக வெறிநோய் விழிப்புணர்வு நாள்

உலக வெறிநோய் விழிப்புணர்வு நாள்

உலக வெறிநோய் விழிப்புணர்வு நாள்

உலக வெறிநோய் விழிப்புணர்வு நாள்

ADDED : அக் 03, 2011 04:02 AM


Google News

புதுச்சேரி : புதுச்சேரி கால்நடை பராமாரிப்புத்துறை சார்பில் உலக வெறிநோய் விழிப்புணர்வு நாள் கூட்டம் நடந்தது.

கால்நடை மருத்துவமனையில், கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் உலக கால்நடைகள் நல அமைப்பினரும் இணைந்து உலக வெறிநோய் விழிப்புணர்வு நாளை நடத்தியது.

நிகழ்ச்சிக்கு இயக்குனர் டாக்டர் பத்பநாபன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கொம்பாக்கம், தேங்காய்த்திட்டு, வில்லியனூர், முத்தியால்பேட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களிலிருந்து வந்திருந்த மகளிர் சுயஉதவிக்குழுக்களைச் சேர்ந்த பெண்கள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் வெறிநாய் கடித்தால் செய்ய வேண்டிய முதலுதவிகள், கடித்த பின் கடைபிடிக்க வேண்டிய சிகிச்சை முறைகள் குறித்து கால்நடை பரமாரிப்புத்துறை இணை இயக்குனர்கள் குணசீலன், சேகர், மனோகர், சாந்தமூர்த்தி ஆகியோர் பேசினர். கால்நடை மருத்துவர் மரியா நன்றி கூறினார்.

உலக வெறிநோய் விழிப்புணர்வு நாளையொட்டி கால்நடை மருத்துவமனையில் 166 வளர்ப்பு பிராணிகளுக்கு வெறிநோய் தடுப்பு ஊசி போடப்பட்டது. அனைத்து கால்நடை மருத்துவமனையிலும் வெறி நோய் தடுப்பூசி முகாம் நடந்தது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us